ஐபோன் 15 வாங்குனா இனி உங்க கார் நடு ரோட்டுல நின்னாலும் பிரச்சனையில்லை ஏன் தெரியுமா?
ஐபோன் 15ல் எமர்ஜென்சி அலார்ட் மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்ட் ஆகிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அந்த செல்போனை வைத்திருப்பவர்கள் சாலையில் செல்லும் போது வாகனம் பஞ்சர் ஆனாலோ அல்லது பெட்ரோல், டீசல் காலியாகி நின்றாலோ அவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 என்ற புதிய தயாரிப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் சேட்டிலைட் உடன் தொடர்புடன் கூடிய ரோடு சைடு அசிஸ்டென்ட் என்ற புதிய ஆப்ஷனை ஏஏஏ என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆப்பிள் போன் வாடிக்கையாளர்களுக்கு சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்14 வெளியீட்டின் போதே இந்த எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பிள் ஐபோனை வைத்திருப்பவர் வாகனத்தில் எங்கு சென்றபோது ஏதாவது எமர்ஜென்சி ஏற்பட்டால் அவர் ஆப்பிள் எமர்ஜென்சி மெசேஜ் வழியாக அவருக்கு வேண்டிய நபர்களுக்கு தான் ஆபத்தில் இருப்பதை உணரும் வகையில் மெசேஜ் அனுப்ப முடியும். இது சேட்டிலைட் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு செல்போன் சிக்னல்கள் வைஃபை எதுவும் தேவையில்லை.
இந்த ஆப்ஷன் உடன் கூடுதலாக தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 போனை அறிமுகப்படுத்தும்போது புதிதாக ரோடு சைடு அசிஸ்டன்ட் என்ற புதிய வசதியையும் அதிகமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஏஏஏ என்ற நிறுவனத்திடம் கைகோர்த்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து தான் இந்த சேவையை வழங்கவுள்ளது.

அதன்படி வாகனத்தில் செல்பவர்கள் திடீரென சாலைகளில் வாகனங்கள் நிற்கும்போது டோர் லாக் ஆகி திறக்காமல் இருந்தாலும், எரிபொருள் தீர்ந்து வாகனம் மேலும் ஓட்ட முடியாமல் போனாலும், வாகனத்தின் பேட்டரி டெட் ஆனாலும், வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனாலும் அவர்களுக்கு இருக்கும் இடத்திற்கே நேரடியாக வந்து அவர்களுக்கு தேவையான உதவியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அந்த வாடிக்கையாளர் தனக்கு ரோடு சைடு அசிஸ்டன்ட் தேவைப்படும்போது ஏஏஏ ஏஜெண்டை நேரடியாக தனது ஆப்பிள் போன் மூலம் தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடம் தனக்கு தேவையான உதவி கொடுத்து தகவல் தெரிவித்தால் அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தேவையான உதவிகளை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால் கார் நேரடியாக வெளிப்பகுதியில் இருக்க வேண்டும் அதாவது கார் நேரடியாக வானத்தைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். அப்பொழுது தான் சேட்டிலைட் மூலம் இந்த தகவல் உரிய நபருக்கு செல்லும். அப்படி இல்லாமல் கார் ஏதாவது அடைத்து வைக்கப்பட்ட பகுதிக்குள் இருந்தால் இந்த மெசேஜை அனுப்ப முடியாது.
அதே நேரம் இது அடர்த்தியான மரங்கள் நிறைந்த காட்டுக்குள்ளும் வேலை செய்யாது. அந்தப் பகுதிக்குள் நீங்கள் சிக்கிவிட்டாலும் இந்த ஆப்ஷனை பயன்படுத்த முடியாமல் போய்விடும். வெட்ட வெளியில் இருக்கும் பகுதியில் தான் இந்த சிஸ்டம் வேலை செய்யும் அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகள் இப்படியாக வெட்டை வெளியில் இருக்கும் என்பதால் பயன்படுத்த பெரிய அளவில் சிக்கல் இருக்காது.
முக்கியமாக இந்த ஆப்ஷன் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்ற நாடுகள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த ரோடு சைடு அசிஸ்டன்ட் ஆப்ஷன் கிடைக்காது. புதிதாக ஆப்பிள் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை இந்த ஏஏஏ சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் இல்லாத வாடிக்கையாளர்கள் இந்த சேவையை ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் இவ்வளவு பணம் என்ற ரீதியில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அனைத்து போன் வாடிக்கையாளர்களும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








