கவன சிதைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆப்பிள் சொல்லும் தீர்வு

Written By:

கைப்பேசி சாதனம் நமது தொலைத்தொடர்பு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்கிறது தான், ஆனால் சில சமயங்களில் அலைப்பேசிகள் நமது கவனத்தையும் சிதறடிக்கிறது.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

முக்கியமாக கார் ஓட்டும்போது கையடக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களால் ஏற்படும் தொந்தரவு அதிகம். சாலையில் இருக்கவேண்டிய கவனம் சிதறி, அது ஆபத்தை உருவாக்கும் வகையில் நம்மை இட்டுசென்று விடுகிறது.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

தொழில்நுட்பம் சார்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளில் ரோட்ஷோ என்ற நிகழ்வு பிரபலமானது, இதில் பங்கேற்ற ஆண்ட்ரூ கிராக் என்பவர் கார் பயணத்தில் இருக்கும்போது ஓட்டுநரின் அனைத்து டிஜிட்டல் கருவிகளும் அணைத்து விடக்கூடிய தொழில்நுட்பத்தை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

ஆண்ட்ரூ கிராக்கின் இந்த கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ஆப்பிள் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை அவரிடமிருந்து வாங்கி தற்போது காப்புரிமை பெற்றுள்ளது.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

ஆண்ட்ரூ கிராக் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த போது, அவை ஸ்மார்ட் வாட்ச்களில் இயங்குவது போல வடிவமைத்திருந்தார். பிறகே அது தொலைப்பேசி பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

கார் ஓட்டும் போது ஓட்டுநர் ஸ்டீயரிங்கை அசைப்பது போன்ற உணர்வை ஃபோன் உணர்ந்தால், அது தானாகவே அணைந்து விடும். அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஃபோனில் இடம்பெற்றிருக்கும்.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

இதற்கான மென்பொருளை பெற்றிருக்கும் ஃபோன், கார்களில் மட்டுமல்லாது பேருந்து, இரயில், விமானம் என எல்லாவற்றிலும் செயல்படும். சமூகவலைதள பதிவுகள், மின்னஞ்சல், ஃபோன் அழைப்புகள் என எந்த தொடர்பையும் நாம் பயணத்தின் போது ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

தற்போது ஆப்பிள் சொந்தமாகிக்கொண்டுள்ள இந்த தொழில்நுட்பத்தை, எப்போது அது வெளியிடவுள்ளது என தெரியவில்லை. இனி ஆப்பிள் தயாரிக்கவுள்ள பொருட்களில் இந்த தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்குமா, இல்லை ஆப்பிளிற்கான அப்டேஷன் மென்பொருள் வெளியிடப்படும் போது, இந்த தொழில்நுட்பமும் சேர்ந்து வருமா என்பது குறித்த தகவல்களும் இல்லை.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

அமெரிக்காவில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சாலைகளில் கவனச் சிதைவால் நடைபெறும் விபத்துக்களால் ஆண்டிற்கு 3179 பேர் மரணமடைகின்றனர். 4,31,000 பேர் படுகாயமடைகின்றனர்.

கவனமான கார் பயணத்திற்கு ஆப்பிளின் புதிய தொழில்நுட்பம

ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகளில் இந்த தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்குமானால், அமெரிக்க மட்டும்மல்லாமல், உலகளவில் கவனமின்றி நடைபெறும் சாலை விபத்துகள் தடுத்து நிறுதப்படும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Apple Just Patented a technology could help to cut down on distracted drivers playing with their phones.
Story first published: Friday, March 31, 2017, 16:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark