விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஸ்போக்டென் நகரத்தை சேர்ந்தவர் கேப் பர்டெட். இவர் தனது தந்தையுடன் பைக்கில் மலையேற்ற பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். இதுகுறித்து தனது தந்தை பாபிடம் போனில் பேசி குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம் என்று கூறி பர்டெட் காத்திருந்தார்.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

அப்போது, பர்டெட் ஸ்மார்ட்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், அவரது தந்தை பாப் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், அந்த இருப்பிடம் பற்றிய தகவலும் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பர்டெட் தனது தந்தை விபத்தில் சிக்கியதாக காட்டப்படும் இடத்திற்கு விரைந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

ஆனால், அங்கு தனது தந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், அடுத்து வந்த குறுந்தகவலில் அவர் இருக்கும் இருப்பிடம் குறித்து தகவல் வந்துள்ளது இதையடுத்து, அங்கு விரைந்துள்ளார்.

அப்போதுதான் அவருக்கு விஷயம் தெரிந்துள்ளது. அவர் வருவதற்கு முன்னரே, அவசர கால உதவி குழுவினர், அவரது தந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதை அறிந்து கொண்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

இதுகுறித்து பர்டெட் தனது ஃபேஸ்புக்கிர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, அவரது தந்தை தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலமாகவே, காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

பைக்கில் இருந்து விழுந்தபோது, தனது தந்தை ஹெல்மெட் அணிந்திருந்தாலும், தலையில் காயமடைந்து அதிர்ச்சியில் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். அப்போது, அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருக்கும் 'Hard Fall Detection' என்ற வசதி மூலமாக, கீழே விழுந்த உடனே, அதில் பதிவு செய்யப்பட்டு இருந்த தனது மொபைல் எண்ணிற்கும், அவசர கால உதவி குழுவுக்கும் தானியங்கி முறையில் தகவல் சென்றிருக்கிறது.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

அடுத்த சில நிமிடங்களில் தனது தந்தை இருந்த இடத்திற்கு அவசர கால மீட்புக் குழுவினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக பர்டெட் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அரை மணிநேரத்திற்குள் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவர் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், ஆப்பிள் வாட்ச்தான் தனது தந்தை உயிரை காப்பாற்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தும் அனைவருமே இந்த 'ஹார்டு ஃபால் டிடெக்ஷன்' தொழில்நுட்ப வசதியை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பைக் ரைடரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை கண்டு வரும் நிலையில், அதனால் பல நன்மைகளும், சீரழிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ஆப்பிள் வாட்ச் மூலமாக பைக் விபத்தில் சிக்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டு இருப்பது, தொழில்நுட்ப வளர்ச்சியின் உன்னதத்தை உணர்த்துவதாக கருத முடியும்.

Image Courtesy: Gabe Burdett/Facebook

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A young man from US has credited Apple Watch feature for saving his father's life after a fatal road accident.
Story first published: Wednesday, September 25, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X