ரூ 4.18 லட்சம் பைக்கை தமிழ்நாட்டிலேயே முதல் ஆளாக டெலிவரி எடுத்த பெண்! முதல்ல யாரை உட்கார வச்சாங்க தெரியுமா?

அப்ரில்லா நிறுவனத்தின் ஆர்எஸ் 457 என்ற பைக்கை தமிழகத்தில் முதன்முறையாக ஒரு குழந்தைக்கு தாயான பெண் ஒருவர் சொந்தமாக வாங்கி உள்ளார். இவர் இந்த பைக்கை வாங்கி அதை அன்பாக்ஸ் செய்யும் வீடியோவை இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஒரு சூப்பர் பைக்கை வாங்கிய இந்த சூப்பர் அம்மா யார்? இவர் வாங்கிய பைக் எப்படிப்பட்டது? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக பைக்குகளை அதிகம் விரும்புபவர்கள் ஆண்களாக இருப்பார்கள். பெண்கள் முரட்டுத்தனமான பைக்குகளை விரும்பாமல், சாதாரண பைக்குகளை விரும்புவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெண்களும் பலர் சூப்பர் பைக்குகள் போன்ற அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்குகளை விரும்பி வருகிறார்கள். பலர் இவ்வாறான பைக்குகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

aprilia rs 457 tamilnadu delivery

ஆனால் இன்றைய காலங்களில் இளம் பெண்கள் இப்படியான பைக்குகளை ஓட்டி செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுத்த அம்மா ஒருவர் இப்படியாக பைக் ரசிகையாக இருந்து ஒரு சூப்பரான பைக்கை வாங்கி பயன்படுத்தியதை பார்த்திருக்கிறீர்களா? இப்படியான ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது அதுவும் இந்த அம்மா வாங்கியது தமிழகத்திலேயே முதல் முறையாக வாங்கப்படும் பைக்காகும்.

அப்ரிலியா நிறுவனத்தின் ஆர்எஸ்457 என்ற பைக்கை சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன்முறையாக தமிழகத்தில் வாங்கியுள்ளார். இந்த பெண் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் நிலையில், இவர் பைக் வெறியராகவும் இருக்கிறார். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பைக்குகள் குறித்த பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

aprilia rs 457 tamilnadu delivery

இவரின் சமூக வலைதள பதிவுகளின் படி இவரிடம் ஏற்கனவே கவாசுகி நிஞ்ஜா இசட் 900 பைக் இருக்கிறது. இதுபோக யமஹா எம்டி15, ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 உள்ளிட்ட பைக்குகளை சொந்தமாக வைத்துள்ளார். இந்த பைக்குகளை அவர் பயன்படுத்தும் வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரும் இவரது கணவரும் சேர்ந்து பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்ட நிலையில், தற்போது இவர் புதிதாக ஒரு பைக்கை வாங்கியுள்ளார்.

அப்ரிலியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆர்எஸ் 457 என்ற பைக்கை தான் இவர் சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த பைக் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பைக்கை பொறுத்தவரை தமிழகத்தில் இதுவரை யாருமே வாங்காத நிலையில் இவர்தான் முதன்முதலாக இந்த பைக்கை வாங்கியுள்ளார்.

aprilia rs 457 tamilnadu delivery

இந்த பைக்கை அவர் டெலிவரி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. லாரியில் பார்சல் செய்யப்பட்டு வந்த பைக்கை இவர் பத்திரமாக இறக்கி வீட்டில் வைத்து அதை அன்பாக்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த புதிய பைக்கில் அவர் தனது குழந்தையை அமர வைத்து மகிழ்ச்சி கொண்ட காட்சிகளும் இதில் இடம் பெற்றன.

அப்ரிலியா நிறுவனத்தின் இந்த ஆர்எஸ்457 பைக்கை பொறுத்தவரை ஒரே ஒரு வேரியண்டில் தான் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் 457சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இன்ஜினை பொறுத்தவரை 46.9 பிஎச்பி பவரையும் 43.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூபாய் 4,18,727 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் மொத்தம் மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உற்பத்தப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் உள்ள கேடிஎம் ஆர்சி 390, கவாஸ்கி நிஞ்சா 300, நிஞ்சா 400, பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் ஆர், யமஹா ஒய் இஸட் எஃப்ஆர் 3, ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

டிரைஸ்பார்க் கருத்து: அப்ரிலியா நிறுவனத்தின் அந்த ஆர்எஸ் 457 என்ற பைக்கை பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பைக் தோற்றத்தில் இருக்கும். பலர் இந்த பைக்கை விரும்பி வாங்குவார்கள் முக்கியமாக ரேஸ் மனப்பான்மை கொண்ட மக்கள் இந்த பைக்கை விரும்பி வாங்க வாய்ப்புகள் உள்ளது. இதன்படி தமிழகத்தில் முதன்முறையாக ஒரு பெண் இந்த பைக்கை வாங்கியுள்ளது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 13:19 [IST]
English summary
Aprilia rs 457 tamilnadu delivery to mom bike lover full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X