ஒவ்வொரு காருக்கும் பொருத்தமான கலர் எது? என்னுடைய சாய்ஸ்!

Written By:

கார் வாங்கும்போது தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் சமாச்சாரங்களில் ஒன்று கலரை தேர்வு செய்வது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு பல வண்ணங்களில் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், பிடித்த கலர், பராமரிப்புக்கு ஏற்ற கலர் என தேர்வு செய்யும்போது மண்டை காய வைக்கும்.

இந்நிலையில், ஒவ்வொரு கார் மாடலுக்கும் குறிப்பிட்ட கலர் மிகப்பொருத்தமாக தெரியும். அவ்வாறு, நம் நாட்டில் விற்பனையாகும் சில முன்னணி கார் மாடல்களுடன் ஒன்றிப் போகும் பொருத்தமான கார் கலர் குறித்த தகவல்கலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அது பயனுள்ளதாகவோ அல்லது உங்கள் கார் வண்ணத்தை தேர்வு செய்வதற்கு உதவிகரமாகவோ இருக்கலாம்.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

விற்பனையில் இந்தியாவின் முன்னணி கார் மாடல்களில் ஒன்றான மாருதி ஸ்விஃப்ட் காருக்கு வெள்ளை வண்ணம்தான் மிக பொருத்தமாக இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

எல்லா கார்களுக்கும் சிவப்பு வண்ணம் பொருத்தமாக இருக்காது. ஆனால், ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு பிற வண்ணங்களைவிட சிவப்பு வண்ணம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

 ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு பழுப்பு வண்ணம் மிகச் சரியாக பொருந்தி போவதுடன், மிகச்சிறப்பான தோற்றப் பொலிவையும் அந்த எஸ்யூவிக்கு தருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ஆரஞ்ச் வண்ணம் மிக பொருத்தமானதாக தெரிகிறது. பிற கார்களிலிருந்து அந்த எஸ்யூவியின் பிரத்யேகத் தன்மையை இந்த வண்ணம் வழங்குகிறது

ஆடி கார்கள்

ஆடி கார்கள்

அனைத்து ஆடி கார்களுக்கும் வெள்ளை நிறம்தான் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஆடி கார்களுக்கு ஒரு பிரிமியம் ஃபீலை தருவது வெள்ளை நிறம்தான். ஆம் ஆடி என்றாலே வெள்ளை நிறமே நினைவில் வருகிறது.

பிஎம்டபிள்யூ கார்கள்

பிஎம்டபிள்யூ கார்கள்

பிஎம்டபிள்யூ கார்களுக்கு பிற நிறங்களைவிட அடர் நீல நிறம்தான் பொருத்தமாக இருக்கிறது. அந்த காரின் டிசைனுக்கு இந்த வண்ணம்தான் கச்சிதமாக பொருந்துகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு சில்வர் வண்ணம்தான் மிகச்சரியாக பொருந்தி போகிறது. அதன் டிசைன் அம்சங்களை பார்ப்போருக்கு முழுமையாக உணர்த்துவதில் இந்த வண்ணம் மிகச்சிறப்பாக இருக்கும்.

டாடா நானோ

டாடா நானோ

டாடா நானோ காருக்கு மஞ்சள் வண்ணம் மிகச்சிறப்பான தோற்றப் பொலிவை கொடுக்கிறது. அந்த காரின் பிரத்யேக வண்ணமாகவும் இது இருப்பதுடன், கொஞ்சம் காஸ்ட்லி உணர்வையும் தருகிறது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா காருக்கு வெள்ளை நிறம்தான் பர்ஃபெக்ட் சாய்ஸ். ஒரு சொகுசு காரை போன்ற தோற்றத்தை வெள்ளை நிற வெர்னா வழங்குகிறது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு அரக்கு வண்ணம்தான் மிகப் பொருத்தமானது. இந்த கலர் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவாவுக்கு சந்தன கலர்தான் பர்ஃபெக்ட்டான இருக்கிறது. பல கார்களுக்கு சந்தன வண்ணம் எடுபடாவிட்டாலும், அது இன்னோவாவின் உடலுக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறது.

 தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

கார் கலரை தேர்வு செய்வது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டது. எனவே, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எனது பொதுவான கண்ணோட்டத்திற்கும், உங்களது விருப்பத்திற்கும் வேறுபாடு இருக்கலாம். ஒவ்வொரு மாடலிலும் உங்களுக்கு விருப்பமான கலர் குறித்து கருத்துப் பெட்டியில் கூறலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Apt color for familiar Indian car models.
Story first published: Friday, May 29, 2015, 17:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark