இசைபுயலாக இருந்தாலும் இந்த காரை வாங்க வெயிட் பண்ணி தான் ஆகனும்! ஊரே வாங்க ஆரம்பித்திருக்கும் மஹிந்திரா கார்

ஏ ஆர் ரகுமான் (A R Rahman) பெரியதாக கார் பிரியர் ஒன்றும் கிடையாது. இதனாலேயே இவர் மிக விலையுயர்ந்த காரை பயன்படுத்தி அதிகமாக பார்த்தது இல்லை. இந்த நிலையில், ஏஆர் ரகுமான் புதியதாக மஹிந்திரா (Mahindra) கார் ஒன்றை வாங்க உள்ளார். இதுவும் அவரது அந்தஸ்துக்கு விலை குறைவான காரே ஆகும். இதை விட முக்கியமானது என்னவென்றால், ரகுமான் வாங்க இருப்பது எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். காரை இன்னும் வாங்கவில்லை, இப்போதுதான் புக் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா, சமீப காலமாக எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. முதல்முறையாக 2022இல் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஆழம் பார்த்த மஹிந்திரா நிறுவனம், அடுத்ததாக பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் களமிறக்குகிறது.

ar rahman booked mahindra xev9e

மஹிந்திராவின் இந்த இரு புதிய எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் முன்னரே அறிவிக்கப்படி இன்று (பிப்.14) துவங்கப்பட்டன. ஏற்கனவே நாடு முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்துவிட்ட மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை எதிர்பார்த்ததை போல் பலரும் போட்டி போட்டிக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றை புக் செய்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மஹிந்திராவின் முக்கியமான அதிகாரிகள் உடன் ஏஆர் ரகுமான் அமர்ந்து உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ar rahman booked mahindra xev9e

பின்னர், புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை ஏஆர் ரகுமான் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. டெஸ்ட் டிரைவ் செய்து முடித்த பின் இந்த காரை புக் செய்ய உள்ளதாக ஏஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான சவுண்ட் டிராக் (Soundtrack)-ஐ அமைத்தது இசைபுயல் ஏஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 59kWh மற்றும் 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 59kWh பேட்டரி மூலமாக 542கிமீ வரையிலான மைலேஜையும், 79kWh பேட்டரியில் 656கிமீ வரையிலான மைலேஜையும் பெறலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ar rahman booked mahindra xev9e

175 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு பேட்டரியை 20%-இல் இருந்து 80% சார்ஜை 20 நிமிடங்களில் நிரப்பிவிட முடியும் என்றும் மஹிந்திரா தெரிவிக்கிறது. இந்த எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.8 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை புக் செய்துள்ளார் என்கிற தகவல் மட்டுமே வெளியாகி உள்ளதே தவிர்த்து, இந்த எலக்ட்ரிக் காரின் எந்த வேரியண்ட்டை, எந்த பேட்டரி உடன் தேர்வு செய்துள்ளார் என்கிற விபரங்கள் கிடைக்க பெறவில்லை. அதேபோல், ஏஆர் ரகுமானுக்கு கார் எப்போது டெலிவிரி செய்யப்படும் என்கிற விபரமும் இல்லை. மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் வருகிற மார்ச் மாத மத்தியில் இருந்து துவங்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2025, 19:18 [IST]
English summary
Ar rahman booked mahindra xev 9e electric car after test drive
மேலும்... #mahindra #Mahindra XEV 9e #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X