4.18 கோடி ரூபா மதிப்புள்ள காரை வாங்கினாரா ஏஆர் ரஹ்மான்!.. இதுதான் இந்த காரின் உண்மையான விலையா!

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான், உலகின் மிகவும் விலை உயர்ந்த மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எஸ்யூவி ரக காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் சிறப்புகள் என்ன?.. 4.18 கோடி ரூபாய்தான் இந்த காரின் உண்மையா விலையா என்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் இருக்கின்றார். இவரின் இசைக்கென்று மிக பெரிய ரசிக பட்டாளமே உண்டு. அது உலகளவில் இருக்கின்றது என்பதுதான் ஏஆர் ரஹ்மானின் தனி சிறப்பாகும். இத்தகைய பிரமாண்ட இசையமைப்பாளரே தற்போது மிக மிக விலை உயர்ந்த கார் மாடலான லம்போர்கினி உருஸ் எஸ் எஸ்யூவி ரக காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Rahman urus s

உலகின் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எஸ்யூவி ரக காரே இதுவாகும். இதன் இந்திய மதிப்பு ரூ. 4.18 கோடி என கூறப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ. 5 கோடியை நெருங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விலை உயர்ந்த காரையே இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வாங்கி இருப்பதாக கூறி அவரது ரசிகர்கள் சிலர் புதிய உருஸ் எஸ் எஸ்யூவி காரின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால், இந்த சொகுசு காரின் கொள்முதல் குறித்து ஏஆர் ரஹ்மான் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

Urus s

ஏஆர் ரஹ்மானுக்கு சொந்தமானது என கூறப்படும் அந்த உருஸ் எஸ் சொகுசு எஸ்யூவி கார் ஓர் கார் டீடெய்லிங் கடைக்கு முன்னர் நிற்கும் படங்களே தற்போது வெளியாகி உள்ளன. அதனை ஏஆர் ரஹ்மானைச் சார்ந்தவர் ஒருவரே அங்கு கொண்டு வந்து டீடெய்லிங் செய்வதற்காக விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

கார் டீடெய்லிங் செய்வதன் வாயிலாக காரின் பெயிண்ட் மற்றும் புதிய தன்மையை வெகு காலங்களுக்கு நீடிக்கச் செய்ய முடியும். குறிப்பாக, சின்ன சின்ன ஸ்கிராட்ச் உள்ளிட்டவற்றையும் ஏற்படாத வண்ணம் தடுக்கும். மேலும், ஏஆர் ரஹ்மானுக்கு சொந்தமானது என கூறப்படும் உருஸ் எஸ் எஸ்யூவி கார் கிளாசி ஷேடான பியான்கோ மோனோசிரஸ் நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த நிறத்தின் அழகை நீடித்து உழைக்க செய்ய வேண்டும் என்கிற நோக்கிலேயே டீடெய்லிங் ஷாப்பில் அந்த கார் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த உருஸ் எஸ் எஸ்யூவி என்பது உருஸ் கார் மாடலின் உச்ச மாடல் ஆகும். மேலும், வழக்கமான உருஸ் சொகுசு எஸ்யூவியைக் காட்டிலும் மிக அதிக திறனை வெளிப்படுத்தும் தேர்வாகவும் அது காட்சியளிக்கின்றது.

இதுதவிர மிக சிறந்த மற்றும் கம்ஃபோர்ட்டான ரைடு அனுபவத்தை வழங்கும் தேர்வாகவும் இந்த உருஸ் எஸ் எஸ்யூவி இருக்கின்றது. இதற்காக இந்த காரில் ஏர் சஸ்பென்ஷன் செட்-அப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. லம்போர்கினி நிறுவனம் உருஸ் கார் மாடலில் மற்றுமொரு தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

உருஸ் பெர்ஃபார்மன்டே தேர்வுதான் அது. இந்த தேர்வு முற்றிலும் அதிக வேகத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த காரில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக பெர்ஃபார்மன்ஸுக்கு ஏற்ற ஃபிக்ஸட் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. உருஸ் எஸ் எஸ்யூவி சொகுசு காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 666 பிஎச்பி 850 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதே திறன் கொண்ட மோட்டாரே உருஸ் பெர்ஃபார்மன்டே தேர்விலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், பெர்ஃபார்மன்ஸ் விஷயத்தில் இரண்டு கார்களுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும். உருஸ் எஸ் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.5 செகண்டுகளிலும், இதே வேகத்தை எட்ட உருஸ் பெர்ஃபார்மன்டே வெறும் 3.3 செகண்டுகளே எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மறக்குமா நெஞ்சம் இசை கான்செர்ட் மூலம் ஏஆர் ரஹ்மான் மிகப் பெரிய சிக்கலில் சிக்கினார். ஆனால், இதில் நடைபெற்ற குளறுபடிகளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சம்பந்தபட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையிலேயே பொய் பரப்புபவரை பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல் தன் பாணியில் ஏர்ஆர் ரஹ்மான் பதிலளித்துக் கொண்டிருக்கின்றார். அந்தவகையிலேயே இந்த கார் கொள்முதலையும் அவர் நிகழ்த்தியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 23, 2023, 11:23 [IST]
English summary
Ar rahman buys lamborghini urus s suv here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+