ஆஸ்கார் விருது வென்றவர் காரின் கேமராவில் இதை கவனிக்கலயா? வீடியோவை பார்த்து குழம்பி போன ரசிகர்கள்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த எலக்ட்ரிக் கார்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்ற பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் (AR Rahman) காருக்குள் இருந்து எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா, மார்க்கெட்டில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக தொடர்ந்து புது, புது கார்களை விற்பனைக்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இதன் மூலமாக, சமீப காலத்தில் மஹிந்திரா நிறுவனத்துக்கு நல்ல முன்னேற்றமும் கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ar rahman enjoys mahindra xev9e

இதற்கு முக்கிய காரணம், அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தன்னுடன் மஹிந்திரா இணைத்துக் கொண்டது ஆகும். டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய கார் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் அவர்களை தன் வசப்படுத்தியது மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானிடம் இருந்து தனது புதிய எலக்ட்ரிக் கார்களுக்கான இசையை பெற்றது என கடந்த 1 வருட காலத்தில் பல தரமான செயல்களை மஹிந்திரா செய்துள்ளது.

ஏஆர் ரகுமான் இசையமைத்து கொடுத்த அந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் வேறு எதுவும் இல்லை... பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகும். இதனால்தான், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விளம்பரங்களில் ஏஆர் ரகுமானை பரவலாக பார்க்க முடிகிறது. இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான டெலிவிரிகள் கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்ட உடனே முதலாவதாக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றவர்களுள் ஏஆர் ரகுமானும் ஒருவர் ஆவார்.

ar rahman enjoys mahindra xev9e

டெலிவிரி பெற்றதில் இருந்து புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் ஏஆர் ரகுமான் பரவலாக தனது அன்றாட போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார். அவ்வாறு, எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை ஓட்டி சென்ற போது காருக்குள் வழங்கப்பட்ட டோல்பி சவுண்ட் சிஸ்டம் (Dolby Sound System)-இன் மயக்கும் ஒலியை கேட்டப்படி மெய்மறந்து டிரைவிங் செய்வதை வீடியோவாக காட்சிப்படுத்தி ஏஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுவரையில் 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "மாமல்லபுரத்தில் உள்ள டெம்பிள்-பேவில் தக்லைஃப் (Thuglife) திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மீண்டும் வடபழனியில் உள்ள பஞ்சதன் ரெக்கார்டிங் அலுவலகத்திற்கு செல்லும்போது" என ஏஆர் ரகுமான் குறிப்பிட்டுள்ளார். ஏஆர் ரகுமான் கார் ஓட்டுவதை அதிகமாக பார்ததது இல்லை. ஆனால் இந்த வீடியோவில் அவரது டிரைவிங்கை காண முடிகிறது.

வீடியோவில், காரின் இடதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் வலதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்படுகிறது. ஏஆர் ரகுமான் காரின் டேஸ்போர்டு கேமராவில் மிரர்-கேமராவை பயன்படுத்தி உள்ளார். அதனால்தான் வீடியோவில் இவ்வாறு தெரிகிறது.

எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரில் டோல்பி அட்மஸ் உடன் உயர் தரத்திலான 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் (Harman Kardon) ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த ஆடியோ சிஸ்டத்தில் இம்மெர்சிவ் (Immersive) மற்றும் ஸ்டூடியோ (Studio) என இரு விதமான சவுண்ட் புரோஃபைல்ஸ் (Profiles) உள்ளன. இது இல்லாமல், பின் இருக்கை பயணிகளுக்கு என பிரத்யேகமாக 'பிரிங் யுவர் ஓவ்ன் டிவைஸ்' (Bring Your Own Device) என்கிற வசதியும் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவே புகழக்கூடிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார் மிகவும் பிடித்துள்ளது என்பது அவர் இந்த காரை தினந்தோறும் பயன்படுத்துவதில் இருந்து அறிய முடிகிறது. எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும், எக்ஸ்இவி 9இ காருக்கு தான் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 19, 2025, 22:48 [IST]
English summary
Ar rahman enjoys his mahindra xev 9e electric car dolby atmos sound system
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+