பறக்கும் பலகையில் ஓர் பரவச பயணம்... கனவு நனவாகிறது...!!

Written By:

ஹோவர்போர்டு எனப்படும் புதிய பறக்கும் பலகையை அமெரிக்காவை சேர்ந்த அர்கா ஸ்பேஸ் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பறக்கும் பலகைக்கு தற்போது முன்பதிவு துவங்கப்பட்டிருப்பதுடன், வரும் ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந் பறக்கும் பலகை செயல்படும் விதம் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆற்றல் வாய்ந்த மின் விசிறிகள்

ஆற்றல் வாய்ந்த மின் விசிறிகள்

இந்த பறக்கும் பலகையில் உள்ள துளைகளில் 36 சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. நிமிடத்திற்கு 45,000 முறை சுழலும் ஆற்றல் வாய்ந்தவை இந்த விசிறிகள். ஹோவர்போர்டுக்கு கீழ் பகுதியில் வெற்றிடத்தை உருவாக்கி, பலகையை மேலே எழும்பி பறக்கச் செய்கிறது.

பேட்டரி

பேட்டரி

இந்த ஹோவர்போர்டில் உள்ள அதிக திறன் வாய்ந்த லித்தியம் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 36 மின்விசிறிகளுக்கும் தேவையான மின் சக்தியை ஊட்டுகிறது.

வேகம்

வேகம்

ஒருவர் மேலே நின்று பயணிக்கும் வசதி கொண்ட இந்த ஹோவர்போர்டு அதிகபட்சமாக மணிக்கு 20 கிமீ வேகம் வரை பறந்து செல்லும்.

பறக்கும் உயரம்

பறக்கும் உயரம்

இந்த பறக்கும் பலகை தரையிலிருந்து ஒரே அடி உயரத்தில் எழும்பி பறக்கும் திறன் கொண்டது.

 ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு

ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு

இந்த ஹோவர்போர்டு சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலமாக இணைத்துக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

இரண்டு மாடல்கள்

இரண்டு மாடல்கள்

80 கிலோ வரை எடை சுமக்கும் இலகு வகை மாடலிலும், 110 கிலோ வரை எடை சுமக்கும் கனரக மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பறக்கும் நேரம்

பறக்கும் நேரம்

இலகு வகை மாடல் ஒருமுறை சார்ஜுக்கு 6 நிமிடங்கள் வரையிலும், அதிக எடை சுமக்கும் மாடடல் 3 நிமிடங்கள் வரையிலும் பறக்கும். ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும். அதாவது, எடை குறைவான ஒருவர் 2 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

 ஸ்பெஷல் சார்ஜர்

ஸ்பெஷல் சார்ஜர்

இந்த ஹோவர்போர்டுக்கு விசேஷ சார்ஜர் ஒன்றை தனியாக விற்பனை செய்யப்படுகிறது. 4,500 டாலர் விலை கொண்ட இந்த பேட்டரி சார்ஜர் மூலம் 35 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம்.

எங்கு வேண்டுமானாலும்...

எங்கு வேண்டுமானாலும்...

சாதாரண சாலைகள் மட்டுமின்றி, பாறைகள், நீர்பரப்பு உள்ளிட்ட அனைத்து விதமான பகுதிகளிலும் இந்த ஹோவர்போர்டு பறக்கும் என்று அக்ராபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

விலை

19,900 அமெரிக்க டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 குறைபாடு

குறைபாடு

மின்விசிறிகள் அதிகபட்ச வேகத்தில் சுழலும்போது, சப்தம் காதை கிழிப்பதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, காதுகளில் சப்த தடுப்பு சாதனத்தை பொருத்திக் கொண்டால் மட்டுமே செலுத்த முடியும் என்கின்றனர்.

பயிற்சி

பயிற்சி

ஸ்கேட்டிங் போர்டு போன்றே, இதில் பயணிப்பதற்கும், பேலன்ஸ் செய்து பயன்படுத்துவதற்கும் பயிற்சி அவசியமாக தேவைப்படும்.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
US based Arca Space Corporation has developed an electronic flying vehicle that can hover over any terrain, including water.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark