டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

நாம் நினைப்பதை விட விரைவாகவே பறக்கும் டாக்ஸிகள் அறிமுகமாக போகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

பறக்கும் டாக்ஸிகள் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்று நீங்கள் நினைத்து கொண்டுள்ளீர்களா? அப்படியானால் உங்கள் எண்ணம் தவறு. ஏனெனில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் பறக்கும் டாக்ஸிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

இதில், அமெரிக்காவை சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் மேக்கர் என்ற பறக்கும் டாக்ஸியை சமீபத்தில் காட்சிப்படுத்தியது. பலரும் நினைத்து கொண்டிருப்பதை காட்டிலும் வெகு விரைவாகவே இந்த பறக்கும் டாக்ஸியின் இருக்கைகளில் அமரக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸி மணிக்கு 240 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லக்கூடியது.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

எனவே விரைவான போக்குவரத்திற்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும். மேலும் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதே வேகத்தில் பயணிக்கும் இந்த திறனை இந்த பறக்கும் டாக்ஸி பெற்றிருப்பதும் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். பைலட் உள்பட மொத்தம் 4 பேர் இந்த பறக்கும் டாக்ஸியில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

பறக்கும் டாக்ஸிகள் அறிமுகம் செய்யப்பட்டால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மக்களின் பயணத்திற்கான மலிவான தேர்வாக அவை இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் பறக்கும் டாக்ஸிகளில் ஒரு மைல் பயணிக்க ஒரு பயணிக்கு 4 டாலர்கள் (சுமார் 295 ரூபாய்) கட்டணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

தற்போது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக உலக நாடுகளின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே சாலை மார்க்கமாக ஒரு இடத்திற்கு பயணம் செய்தால், அதிக நேரம் தேவைப்படும். ஆனால் ஆகாய மார்க்கமாக பயணம் செய்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை இருக்காது.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

எனவே பயணிகளின் பொன்னான நேரம் மிச்சமாகும். இதுவே பறக்கும் டாக்ஸிகளின் மிகவும் முக்கியமான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை மிகவும் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு பறக்கும் டாக்ஸி ஏற்றதாக இருக்கும். ஆனால் மலிவாக இல்லாவிட்டால், இத்தகைய திட்டங்கள் இங்கு வெற்றி பெறுவது கடினம்.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மியாமி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 2024ம் ஆண்டிற்குள் மேக்கர் பறக்கும் டாக்ஸியை வணிக ரீதியில் அறிமுகம் செய்து விட வேண்டும் என ஆர்ச்சர் ஏவியேஷன் எதிர்பார்க்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது மேக்கர் பறக்கும் டாக்ஸியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

டிராபிக் ஜாம் பிரச்னையே இல்ல... நாம நெனைக்கறதை விட பறக்கும் டாக்ஸிகள் சீக்கிரமா வர போகுது... இவ்ளோ ஸ்பீடா?

ஆனால் மறுபக்கம் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை உலக நாடுகள் ஊக்குவித்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களும், பறக்கும் டாக்ஸிகளும் உலகின் எதிர்கால போக்குவரத்து முறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Archer Aviation Maker Flying Taxi Can Speed At 240 Kmph. Read in Tamil
Story first published: Friday, June 11, 2021, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X