பைக், கார்களுக்கு கொடுப்பதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா?.. அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?..

இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழங்கப்படுவதைப் போல் ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா?, என்கிற கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

கார், பைக் மீது மட்டுமில்லைங்க வானூர்திகள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களும் இந்த உலகில் இருக்கின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எனவே, இத்தகையோரைக் கவரும் விதமாக சில வானூர்தி தயாரிப்பு நிறுவனங்கள் தனிநபர் பயன்பாட்டிற்கான சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைத் தயாரித்து, அவற்றை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இதில், ஹெலிகாப்டர்களுக்கே செல்வந்தர்கள் மத்தியில் நல்ல மவுசு நிலவுகின்றது. ஏனெனில், அவற்றை தரையிறக்க மற்றும் பறக்க செய்வதற்கு விமானங்களுக்கு தேவைப்படுவதைப் போல் பெரிய ஓடுதளம் தேவைப்படாது. ஹெலிபேட் என்றழைக்கப்படும் ஓர் சிறிய இடம் இருந்தாலே போதுமானது.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இந்த ஹெலிபேடை அமைக்க பரந்த இடம் கொண்ட உங்களது வீட்டின் மொட்டை மாடியே போதும். எளிதில் தரையிறங்குதல் மற்றும் பறத்தலை அங்கு எளிதில் செய்துகொள்ள முடியும். இத்தகைய ஹெலிகாப்டர்களில் பைக் மற்றும் கார்களில் வழங்கப்படுவதைப் போல சாவி வழங்கப்படுமா?, என்ற கேள்வி நம்மில் ஒரு பலருக்கு எழும்பாமல் இல்லை. இந்த கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

பைக் மற்றும் கார்களுக்கு நிலவுவதைப் போல ஹெலிகாப்டர்களையும் திருடிச் செல்லும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாகவே சிவில் ஹெலிகாப்டர்கள் கட்டாயம் சாவியுடன் வருகின்றன. தேவையைப் பொருத்து சில ராணுவ விமானங்களிலும் சாவிகள் வழங்கப்படுகின்றன.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

ஹெலிகாப்டர்களின் ரகங்களும், அவற்றில் சாவியின் பயன்பாடும்:

பிஸ்டனால் இயங்கக் கூடிய பெரும்பாலான ஹெலிகாப்டர்கள் சாவியைக் கொண்டிருக்கின்றன. இது இருந்தால் மட்டுமே விமானத்தை ஆன் செய்ய முடியும். சாவியில்லாமல் ஹெலிகாப்டர்களுக்குள் நுழையகூட முடியாது. இந்த ரக விமானங்கள் கதவுகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக ராபின்சன் ஆர்22 ஹெலிகாப்டர்.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது மிக சுலபம் என்பதால் வேறு விமானிகள்கூட இதனை எளிதில் திருடச் செய்யலாம். இதைக் காரணம் காட்டியே இதுபோன்ற சிறிய ரக பிஸ்டன் பவர்ட் ஹெலிகாப்டர்களில் சாவிகள் வழங்கப்படுகின்றன. அதேவேலையில், டர்பைன் பவர்ட் ஹெலிகாப்டர்களில் அவற்றை ஆன் செய்ய சாவிகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், அதன் கதவுகளை திறக்க சாவிகள் வழங்கப்படுகின்றன.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இவை அனைத்திலும் மாறுபட்ட ஹெலிகாப்டர்களாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. இக்னிஷனை எனேபிள் (enables) மற்றும் டிசபிள் (disables) செய்வதற்கென்றே பிரத்யேக சாவிகளை இவை கொண்டிருக்கும். இந்த சாவி பொருத்தப்படாமல் இக்னிஷன் ஆன் செய்யப்பட்டிருந்தாலும், அதன் டர்பைன்கள் சுழலாது. மேலும், எஞ்ஜினும் ஆன் ஆகாது.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர்களில் டூர் ஹேண்டில்களை லாக் செய்யும் பார்களும் வழங்கப்பட்டிருக்கும். அதேநேரத்தில் அனைத்து ஹெலிகாப்டர்களிலும் இதுமாதிரியான சாவியை போடும் வசதி வழங்கப்பட்டிருக்காது. மிக முக்கியமான மற்றும் எளிதில் திருடுபோகும் வாய்ப்பு உள்ள ராணுவ ஹெலிகாப்டர்களில் மட்டுமே சாவி வசதி வழங்கப்பட்டிருக்கும்.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

மிலிட்டரி ஹெலிகாப்டர்களில் சாவிகள் வழங்கப்படுவதற்கான சுவாரஷ்ய காரணம்:

முந்தைய காலங்களில் எந்த மிலிட்டரி ஹெலிகாப்டர்களிலும் சாவி என்ற விஷயம் பயன்பாட்டிலேயே இல்லாததாக இருந்தது. ஆனால், ஓர் சம்பவம் இந்த விஷயத்தை மாற்றி அமைத்துவிட்டது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த ஓர் ஹெலிகாப்டர் மெக்கானிக், ஹெலிகாப்டர் ஒன்றை திருடிச் சென்று நேராக வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்வெளியில் தரையிறக்கினார்.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இந்த சம்பவமே அனைத்து ஹெலிகாப்டர்களிலும் சாவி வழங்கும் நிலையை உருவாக்கியது. இந்த நிகழ்வு 1974 ஆம் ஆண்டில் அரங்கேறியது. ராபர்ட் கே பிரஸ்டன் எனும் அந்த நபர் ஹெலிகாப்டர் பைலட்டாகும் முயற்சியில் தன்னுடைய படிப்பை மேற்கொண்டார். ஆனால், போதியளவு மார்க்கை பெறாததால் அவரின் முயற்சி தோல்வியுற்றது.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

எனவே அவருக்கு ஹெலிகாப்டர் மெக்கானிக் போஸ்ட்டிங்கே கிடைத்தது. இந்த வேலையில் விருப்பமில்லாத அந்நபர் தன்னுடைய தனித் திறமையை வெளிக்காட்ட நினைத்தார். இதன்படி ஹெலிகாப்டர் ஒன்றை கையில் எடுத்த அவர் நேரடியாக வெள்ளை மாளிகையில் தரையிறக்கினார். இந்த அத்துமீறல் செயலால் அவர், அவரது வேலையை இழந்தார்.

பைக், கார்களுக்கு கொடுப்படுவதை போல ஹெலிகாப்டர்களுக்கும் சாவி வழங்கப்படுமா? அந்த சாவி எதுக்கெல்லாம் பயன்படும்?

இதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டிற்கும் அவர் ஆளாகினார். இதுமட்டுமா, நீதிமன்றத்தினால் ஒரு வருடம் சிறைத் தண்டனை மற்றும் 2,400 அமெரிக்க டாலர்கள் அபராதத்தையும் அவர் பெற்றார். இந்த சம்பவத்தை அடுத்தே ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ராணுவ ஹெலிகாப்டரிலும் சாவி எனும் முறையை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தன.

Article Published On: Sunday, July 10, 2022, 8:30 [IST]
English summary
Are keys given to helicopters like bikes and cars
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+