சொந்த ஊரில் திடீரென ஸ்கூட்டரில் வலம் வந்த பிரபல மனிதர்! பின்னாடி அவர் வேறயா! வாயை பிளந்து பார்த்த பொதுமக்கள்!

சினிமா மற்றும் இசை துறைகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. இந்த 2 துறைகளிலும் புகழ் பெற்று விளங்கும் பலரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையைதான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். இதற்கு அர்ஜித் சிங் (Arijit Singh) ஒரு உதாரணம். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவரான அர்ஜித் சிங், தற்போது உலக புகழ் பெற்ற பாடகராக திகழ்கிறார். இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் ஒரு சாதாரண ஊரின் தெருக்களில் அர்ஜித் சிங் ஸ்கூட்டர் ஓட்டி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அர்ஜித் சிங் ஸ்கூட்டர் ஓட்டியது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜிகான்ஜி என்ற ஊர் ஆகும். இதுதான் அர்ஜித் சிங்கின் சொந்த ஊர்.

Arijit Singh Spotted Riding Yamaha Aerox

சொந்த ஊரில் அர்ஜித் சிங் மிகவும் எளிமையான முறையில் ஸ்கூட்டர் ஓட்டி கொண்டு வந்ததை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். ஆனால் இந்த வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், உங்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் கிடைக்கும். அர்ஜித் சிங்கின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரை கொஞ்சம் நன்றாக கவனியுங்கள்.

அவர் உலக புகழ்பெற்ற மற்றொரு பாடகரான எட் ஷீரன் (Ed Sheeran) ஆவார். இங்கிலாந்தை சேர்ந்த இவருக்கும், அர்ஜித் சிங்கை போல், உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அர்ஜித் சிங்கும், எட் ஷீரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இந்த நட்பின் அடிப்படையிலேயே அர்ஜித் சிங்கின் சொந்த ஊரில் இருவரும் ஸ்கூட்டரில் ஹாயாக வலம் வந்துள்ளனர்.

Ed Sheeran-Arijit Singh

முதலில் அந்த ஊர் மக்களுக்கு அர்ஜித் சிங்கின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்தது யார்? என தெரியவில்லை. பிறகுதான் அவர் எட் ஷீரன் என்பது தெரிய வந்துள்ளது. உலக புகழ்பெற்ற 2 கலைஞர்களின் இந்த எளிமை, ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஜிகான்ஜி பகுதி மக்கள் தற்போது நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அர்ஜித் சிங்கும், எட் ஷீரனும் பயணம் செய்தது யமஹா ஏரோக்ஸ் (Yamaha Aerox) ஸ்கூட்டர் போல் தெரிகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 1.49 லட்ச ரூபாய் முதல் 1.53 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாடகர்கள் அர்ஜித் சிங் மற்றும் எட் ஷீரன் ஆகியோரின் எளிமை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. அவர்கள் இருவரும் பெயர், புகழ் எல்லாவற்றையும் மறந்து, மிகவும் சாதாரண மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்துள்ளனர்.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அவர்கள் இருவரும் பின்பற்றியிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எனவே ஹெல்மெட் அணிந்திருந்தால், அதன் முக்கியத்துவம் ரசிகர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கும்.

பிரபல மனிதர்கள் பொது இடங்களில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட கூடாது என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பலரும் ஹெல்மெட் அணிவதில்லை. இதன் காரணமாக சாலை விபத்துக்களால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே பிரபலமான மனிதர்கள் பொது இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் வந்தால், ஹெல்மெட் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நல்ல மெசேஜை, இது அவர்களது ரசிகர்களுக்கு கடத்தும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2025, 22:22 [IST]
English summary
Arijit singh spotted riding yamaha aerox viral video all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+