போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

2 முன்னணி நடிகர்கள் மிகவும் விலை உயர்ந்த ஒரே காரை வாங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் (Ranveer Singh) கடந்த ஜூன் மாதம் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 (Mercedes-Maybach GLS600) காரை டெலிவரி எடுத்தார். இது சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரில் மற்றொரு நடிகரான அர்ஜூன் கபூரும் (Arjun Kapoor), ரன்வீர் சிங்கும் பயணம் மேற்கொண்டனர்.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

இந்த கார் அர்ஜூன் கபூரை அப்போதே கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது அதே காரை அர்ஜூன் கபூர் வாங்கியுள்ளார். தற்போது ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகிய இருவரிடமும் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி கார்கள் இருக்கின்றன. இந்த இரண்டு கார்களும் நீல நிறத்தில்தான் வாங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி காரின் விலை 2.43 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை இன்னும் பல லட்ச ரூபாய் கூடுதலாக வரும். மேலும் இது எந்தவொரு கஸ்டமைசேஷனும் செய்வதற்கு முன்பான விலை என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

வாடிக்கையாளர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசேஷன் செய்து கொண்டால், விலை இன்னும் உயரும். ஆனால் ரன்வீர் சிங்கும், அர்ஜூன் கபூரும் ஏதேனும் கஸ்டமைசேஷன் பணிகளை செய்துள்ளார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த இரண்டு நடிகர்களிடமும் இதற்கு முன்பே ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

இதன்படி ரன்வீர் சிங்கிடம் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) மற்றும் உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் (Urus Pearl Capsule Edition) ஆகிய கார்கள் இருக்கின்றன. லம்போர்கினி உருஸ், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். ஆனால் ரன்வீர் சிங்கின் கார் கலெக்ஸன் இத்தோடு நின்று விட போவதில்லை.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

அவரிடம் ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L), அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் (Aston Martin Rapide S) மற்றும் மெர்சிடிஸ்-மேபக் எஸ்500 (Mercedes-Maybach S500) உள்ளிட்ட கார்களும் சொந்தமாக உள்ளன. கார் கலெக்ஸனை பொறுத்தவரையில், ரன்வீர் சிங்கிற்கு, அர்ஜூன் கபூர் சற்றும் சளைத்தவர் கிடையாது.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

அர்ஜூன் கபூரிடம், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), மஸராட்டி லிவாண்ட்டே (Maserati Levante) மற்றும் ஆடி க்யூ5 (Audi Q5) ஆகிய கார்கள் இருக்கின்றன. பொதுவாக திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது வாடிக்கையாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

இந்த வரிசையில் ரன்வீர் சிங்கும், அர்ஜூன் கபூரும் ஒரே காரை அடுத்தடுத்து வாங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 கார், இந்தியாவிற்கு சிபியூ (CBU - Completely Built Unit) வழியில் கொண்டு வரப்படுகிறது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் தேர்வுகளில் மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 கார் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் மிகவும் பிரீமியமாக இருக்கும். ஏனெனில் நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, மர வேலைப்பாடுகள், பெரிய பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

அதே சமயம் இந்த பிரம்மாண்ட சொகுசு எஸ்யூவி காரில், 4 லிட்டர், வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது ட்வின்-டர்போசார்ஜ்டு யூனிட் ஆகும். ஏஎம்ஜி வாகனங்களில் இருந்து இந்த இன்ஜின் பெறப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 558 பிஹெச்பி பவரையும், 730 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

போட்டி போட்டு கொண்டு ஒரே காரை வாங்கிய 2 முன்னணி நடிகர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!

இதனுடன் 48 வோல்ட் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக 22 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதே சமயம் இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சொகுசு வசதிகளில் மட்டுமல்லாது, செயல்திறனிலும் இந்த கார் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Arjun kapoor buys a mercedes maybach gls600 luxury suv check details here
Story first published: Tuesday, September 7, 2021, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X