2 பொண்ணு மட்டும்தான்னு நெனச்சோம்! நடிகை ஸ்ரீதேவியின் மகனா இவர்! உண்மை முகம் இப்பதான் வெளிய வந்திருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று பீகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் (BGauss RUV 350 Max). தற்போதைய நிலையில் இதன் விலை வெறும் 1.35 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். பார்ப்பதற்கு இது சற்று அதிகமான விலையாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு எல்லாம், இது மிகவும் சாதாரணமான ஒரு விலைதான். அப்படி இருக்கும்போது, பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் சமீபத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருந்தார்.

அவர் அர்ஜூன் கபூர் (Arjun Kapoor) ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், பூஜை செய்து, தேங்காய் எல்லாம் உடைத்து, அவர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருந்தார். இது மிகவும் சாதாரணமான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால், அர்ஜூன் கபூரின் எளிமையை சமூக வலை தளங்களில் பலரும் பாராட்ட தொடங்கினர்.

Arjun Kapoor-Range Rover

இந்த செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், அர்ஜூன் கபூர் தற்போது மற்றொரு புதிய வாகனத்தை வாங்கியுள்ளார். அது மிகவும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி ஹெச்எஸ்இ (Range Rover LWB HSE) கார் ஆகும். இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக சுமார் 3 கோடி ரூபாய் வரும்.

சாதாரணமான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியதால் அர்ஜூன் கபூரை பாராட்டி கொண்டிருந்த பலரும், அவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியிருப்பதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். ஆனால் இதுதான் அர்ஜூன் கபூரின் உண்மை முகம். ஆம், அவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அதிகமாக விரும்ப கூடியவர்.

Arjun Kapoor s Range Rover

அவரது கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி. அர்ஜூன் கபூரிடம், மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) மற்றும் மஸராட்டி லீவண்டே (Maserati Levante) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளன.

இருப்பினும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும் என்ற காரணத்தால்தான், பீகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, அர்ஜூன் கபூர் வாங்கியுள்ளார். இந்த வரிசையில் அவரது வீட்டிற்கு வந்துள்ள ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி ஹெச்எஸ்இ காரானது, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 345 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. 13.7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என இந்த காரில் ஏகப்பட்ட அதிநவீன வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.

அர்ஜூன் கபூரின் சகோதரியும், பிரபல நடிகையுமான ஜான்வி கபூரும் (Janhvi Kapoor) கூட, சமீபத்தில் இதே ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே வெள்ளை நிறத்தில்தான் இந்த ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) என்பதும், அவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் (Khushi Kapoor) என்ற 2 மகள்கள் இருப்பதும் அனைவருக்கும் தெரியும். ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இருவருமே தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளாக உள்ளனர்.

சமீபத்தில் வெளியான தேவரா (Devara) திரைப்படத்தில் கூடி ஜான்வி கபூர் நடித்திருந்தார். அப்படி இருக்கும்போது, ஜான்வி கபூர், அர்ஜூன் கபூரின் சகோதரியா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆனால் இது உண்மைதான். ஸ்ரீதேவியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான போனி கபூருக்கு 2 மனைவிகள்.

அவரது முதல் மனைவி மோனா ஷோரி (Mona Shourie) ஆவார். இந்த தம்பதியின் மகன்தான் நடிகர் அர்ஜூன் கபூர். இந்த தம்பதிக்கு அன்சுலா (Anshula) என்ற மகளும் உள்ளார். போனி கபூர்-மோனா ஷோரி திருமணம் கடந்த 1983ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் அவர்கள் இருவரும் 1996ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதன்பின்னர் அதே ஆண்டு, நடிகை ஸ்ரீதேவியை போனி கபூர் திருமணம் செய்தார். இந்த தம்பதியின் மகள்தான் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர். எனவே ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருக்கு, அர்ஜூன் கபூர் சகோதரர் முறை வருகிறது. நடிகை ஸ்ரீதேவிக்கு மகன் முறை வருகிறது. இது உண்மையில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அர்ஜூன் கபூர், மற்ற பாலிவுட் நடிகர், நடிகைகளை போலவே, விலை உயர்ந்த சொகுசு கார்கள் மீது காதல் கொண்டவராக உள்ளார். அவர் தொடர்ச்சியாக வாங்கி கொண்டுள்ள கார்களே அதற்கு சாட்சி. எனவே வரும் காலங்களில் அவர் தனது கார் கலெக்ஸனை மேலும் பெரிதாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 12:34 [IST]
English summary
Arjun kapoor buys range rover worth rs 3 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+