காலில் செருப்பு இல்ல... எளிமையான உடையில் வந்து இறங்கியவர் இந்த விவிஐபி -இன் மகனா? காரை பார்த்து கூடிய கூட்டம்!
அர்ஜூன் டெண்டுல்கர் (Arjun Tendulkar), கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுகரின் (Sachin Tendulkar)-இன் மகன் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். தந்தையை போல் கிரிக்கெட் வீரராக வளர்ந்திருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர் ஓர் வேக பந்து வீச்சாளர் ஆவார்.
25 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் கோவா அணிக்காக ரஞ்சி கோப்பை (Ranji Cup) உள்ளிட்ட தொடர்களில் விளையாடி உள்ளார். 2021ஆம் ஆண்டில் ஐபிஎல் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் ஏலத்தில் வாங்கப்பட்டது பெரிதும் கவனத்தை ஈர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியவர்கள் பலர் சர்வதேச வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.

இதனால், 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்றதன் மூலம் அர்ஜூன் டெண்டுல்கரின் வாழ்க்கை மாற போகிறது என நினைத்தோம். ஆனால், அந்த ஐபிஎல் தொடருக்கு பின் பெரியதாக அர்ஜூன் டெண்டுல்கரின் முகம் வெளியே தெரியவில்லை. மும்பையில் சில சமயங்களில் தனது விலையுயர்ந்த கார்களில் வெளியே வரும்போது அர்ஜூன் டெண்டுல்கரின் பெயர் சமூக வலைத்தளங்களில் அடிப்பட்டது.
அந்த வகையில், தற்போது மீண்டும் அர்ஜூன் டெண்டுல்கரின் முகம் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த முறை தனது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) காரில் அர்ஜூன் டெண்டுல்கர் காட்சி தந்துள்ளார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 6-சீரிஸ் ஜிடி (6-Series GT) காரில் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் சென்றுள்ளார்.

பொதுவாகவே, சச்சின் டெண்டுல்கரின் குடும்பத்தினர் ஆன்மீகத்தில் ஈடுப்பாடு கொண்டவர்கள். இருந்தாலும், வாழ்க்கையில் ஏதேனும் முக்கியமான முடிவை எடுக்கும்போதுதான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் ஏதேனும் கோயிலுக்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது தனியாக தனது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரில் அர்ஜூன் டெண்டுல்கர் வந்து சென்றுள்ளார். இதனால், அர்ஜூண் டெண்டுல்கர் தனது வாழ்வில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
அர்ஜூன் டெண்டுல்கரிடம் நீலம் நிறத்திலான பிஎம்டபிள்யூ 6-சீரிஸ் ஜிடி கார் உள்ளது. பிஎம்டபிள்யூ 6-சீரிஸ் ஜிடி கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இந்த காரின் விற்பனையை ஏற்கனவே பிஎம்டபிள்யூ நிறுவனம் நிறுத்திவிட்டது. அர்ஜூன் டெண்டுல்கருடன் தற்போது காட்சித்தந்து இருப்பது பழைய தலைமுறை பிஎம்டபிள்யூ 6-சீரிஸ் ஜிடி கார் ஆகும்.
கடைசியாக விற்பனையில் இருந்த பிஎம்டபிள்யூ 6-சீரிஸ் காரின் தோற்றம் இன்னும் அதிக மாடர்ன் லுக்கில் இருந்தது. இந்தியாவில் விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன் கடைசியாக 6-சீரிஸ் ஜிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.71.50 லட்சத்தில் இருந்து ரூ.79.90 லட்சம் வரையில் இருந்தன. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்பட்டுவந்த இந்த பிஎம்டபிள்யூ கார் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைத்து வந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அர்ஜூன் டெண்டுல்கரின் இந்த பிஎம்டபிள்யூ கார் பழைய ஜென்ரேஷனாக இருப்பினும், பார்ப்பதற்கு அழகாக உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் குடும்பத்தில் நிச்சயமாக இதனை காட்டிலும் விலையுயர்ந்த கார்கள் இருக்கும். இந்த பிஎம்டபிள்யூ காரையும் அர்ஜூன் டெண்டுல்கர் தனது சொந்த முயற்சியில் வாங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் குறைவே. ஆனால், எதிர்காலத்தில் இதனை காட்டிலும் விலையுயர்ந்த கார்களை இந்த வேகப்பந்து வீச்சாளர் வாங்குவார் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








