பட்டபகலில் கத்தி முனையில் உரிமையாளரை மிரட்டி பஜாஜ் டோமினார் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்..!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

இன்றைய இந்தியாவில் பைக் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகின்றன. நாளிதழ்களில் தினம் ஒரு செய்தியாக நம்மில் பலர் இவற்றை கடந்து வருகிறோம்.

ஆனால் சற்று எதிர்பாராத விதத்தில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் வாகன ஓட்டிகள் பலரை அதிர்ச்சியாக்கியுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு...

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

இந்தியளவில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படும் பகுதிகளில் தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் முன்னிலை வகிக்கிறது.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

அதிவேகமான வாகன இயக்கத்தால், அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் அவ்வப்போது விபத்துகளில் சிக்கும் செய்தி உலா வரும்.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

விபத்து செய்திகளை கடந்து தற்போது ஹைதராபாத் நகரத்தில் அதிகளவில் வாகன திருட்டுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களை திருடும் குற்றங்கள் அங்கு அதிகரித்துள்ளன.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

சமீபத்தில் வெளியான சிசிடிவி காட்சி ஒன்றில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பட்ட பகலில் பரபரப்பான சாலையில் பைக் ஒன்றை திருடி சென்றுள்ளனர்.

Trending On DriveSpark Tamil:

பைக்கில் வந்தர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

அதுவும் பைக்கில் இருந்த உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி இறக்கிவிட்டு, பிறகு அவரை அடித்து அப்புறப்படுத்தி, முகத்தை மறைத்துக்கொண்ட அந்த மூன்று பேர் பைக்கை எடுத்து செல்கின்றனர்.

ஹைதராபாத் பைக் திருட்டு சம்பவத்தின் வீடியோ:

பரபரப்பான சாலையில், பல வாகன ஓட்டிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் உரிமையாளர் தனது பைக்கை காப்பாற்ற, கையில் இருக்கும் ஹெல்மெட்டைக் கொண்டு மர்ம நபர்களிடன் போராடும் காட்சிகள் நெஞ்சை கனமாக்குகின்றன.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

ஜூப்லி ஹில்ஸ் என்பது ஹைதராபாத்தின் மையப்பகுதி. அங்கேயே இவ்வாறு கத்தியை காட்டி பைக்கை வழிப்பறி செய்துள்ள சம்பவம், சாலை பயனாளிகளை பதற்றமடைய செய்துள்ளது.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

இதுக்குறித்து ஹைதராபாத் போலீசார் தெரிவித்த போது, இந்த பைக் வழிப்பறி சம்பவம் காலை 11.30 மணியளவில் நடந்ததாக கூறுகின்றனர்.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

ஒருதனிப்பட்ட வேலையாக பஜாஜ் டோமினார்பைக்கில் வந்த இரண்டு பேரில், ராஜேந்திர் என்பவர் ஒரு கட்டிடத்திற்குள் சென்றுவிட, யாத்கிரி என்பவர் மட்டும் பைக்கிடம் இருந்துள்ளார்.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

அப்போது, அந்த வழியாக வந்த மூன்றுபேர் யாத்கிரியை மிரட்டி, கத்தியை காட்டி பயமுறுத்தி சில தாக்குதல்கள் செய்து அந்த டோமினார்பைக்கை கைப்பற்றி சென்றுள்ளனர்.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

ஹைதராபாத் போலீசார் இதுக்குறித்த தகவல் அறிந்து, வழக்கு பதிவு செய்து, இந்த குற்ற சம்பவங்கள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

இதுபோன்ற சமயங்களில் பைக்கையும் நம்மையும் காப்பாற்றிக்கொள்ள சமயோஜித புத்தியையும், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளையும் ஒருங்கே பயன்படுத்துவது மிக நல்லது.

Trending On DriveSpark Tamil:

பல்டியடித்த டாடா டியாகோ கார்... ஆச்சர்யம் என்னன்னா?

மின்சார கார்கள் விலை குறைவாக இருக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்: மாருதி சுஸுகி எச்சரிக்கை..!!

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

அதன்படி, மர்ம நபர்களால் நீங்கள் பைக்கில் செல்லும் போது நிறுத்தப்பட்டால், சாவியை உடனே கழட்டி மறைத்து வைத்துவிடுவது நல்லது. இல்லை அதை தற்காத்துக்கொள்ள ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்.

கத்திமுனையில் பறித்து செல்லப்பட்ட பஜாஜ் டோமினார்பைக்..!!

டிராக்கிங் சாதனத்தை பைக்கில் பொறுத்தலாம் அதேபோல எப்போதும், எங்கேயும் பைக்கின் எஞ்சினை இயக்கத்தில் வைத்தவாறே விலகி செல்வதை தவிருங்கள்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Armed Gang With Knives Snatched Bajaj Domniar Bike At Knife Point. Click for Details...
Story first published: Monday, January 8, 2018, 12:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark