மனசுல கோஹ்லினு நெனப்பு! ராங் சைடில் வந்த பெண்ணுக்கு பாடம் புகட்டிய டிரைவர்! வீடியோ வெளிய வந்து மானமே போகுது!
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ராங் சைடில் (Wrong Side) வாகனங்களை ஓட்டும் நபர்களால், ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக உள்ளன. ராங் சைடில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது? என்பதை இந்த வீடியோக்கள் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும் ஒரு சிலர் தொடர்ந்து ராங் சைடில் பயணம் செய்து கொண்டேதான் உள்ளனர்.
இந்த வரிசையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் (Honda Activa Scooter), ராங் சைடில் பயணம் செய்த பெண் ஒருவரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆகி கொண்டிருப்பதற்கு, அந்த பெண்ணின் நடத்தையும் ஒரு காரணம். இந்த விஷயத்தில் என்ன நடந்தது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ, ஒரு காரின் டேஷ்போர்டு கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், 2 லேன் சாலை ஒன்றில் ஏராளமான வாகனங்கள் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
அப்போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட காருக்கு எதிர் திசையில், அதாவது ராங் சைடில், ஒரு பெண் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. ராங் சைடில் வந்தது, ஹெல்மெட் அணியாதது போன்ற விதிமுறை மீறல்களுடன், கொஞ்சம் திமிராகவும் அவர் நடந்து கொண்டதை வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

அதாவது கார் முன்னோக்கி செல்ல அவர் வழி விடவில்லை. மாறாக காருக்கு குறுக்கே நின்று கொண்டார். அவரது பார்வையில், அத்தனை தவறும் கார் டிரைவர் மீதுதான் என அவர் நினைத்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் உண்மையில் ராங் சைடில் வந்தது அந்த பெண்ணின் தவறுதான்.
அவர் அதை கொஞ்சம் கூட உணரவில்லை. போதாக்குறைக்கு அவர் சம்பவம் நிகழ்ந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம் (இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது). ஏனெனில் அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களுக்கு அவர் கை காட்டுவதை நம்மால் வீடியோவில் தெளிவாக காண முடிகிறது. உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், காருக்கு வழி விடாமல் அவர் கடுமையாக நடந்து கொண்டார்.
அத்துடன் சாலையில் இருந்த இன்னொரு லேனிற்கு போகும்படி சைகை மூலமாக அவர் கார் டிரைவருக்கு உத்தரவிடவும் செய்தார். ஆனால் தன் மீது தவறு இல்லை என்பதால், கார் டிரைவர் விடுவதாக இல்லை. அவர் இன்னொரு லேனிற்கு செல்லாமல் அப்படியே நின்று கொண்டார். இப்படியே சிறிது நேரம் கழிந்தது.
காரும், ஸ்கூட்டரும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தன. இறுதியில் ஸ்கூட்டரில் வந்த பெண் வேறு வழியில்லாமல், காருக்கு வழி விட்டார். காருக்கு அருகே இருந்த சிறிய இடைவெளியில் அவர் சென்று விட்டார். ஆனால் அதுவும் ராங் சைடுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் இந்த பெண் ராங் சைடில் பயணம் செய்ததன் மூலமாக தன்னுடைய உயிரை மட்டும் பணயம் வைக்கவில்லை. கூடவே மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நல்ல வேளையாக அவரது இந்த ராங் சைடு பயணம் காரணமாக சாலை விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் சூழலில், கமெண்ட் செக்ஸனில், நிறைய பேர் இந்த பெண்ணுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பெண்ணின் 'ஆட்டிடியூட்' கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை போல் ஆக்ரோஷமாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். அத்துடன் அடாவடித்தனமாக நடந்து கொண்ட அவருக்கு வழி விட மறுத்ததன் மூலம் கார் டிரைவர் தக்க பாடம் புகட்டியிருப்பதாகவும் நிறைய பேர் கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்த பெண்ணுக்கு எதிராக காவல் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நிறைய பேர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், அதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இனிமேலாவது ராங் சைடில் பயணம் செய்வதை வாகன ஓட்டிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த நேரத்தில் எங்களுடைய கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








