இந்த மாதிரி ஒரு வண்டியை வாங்கிய மொத பிரபலம் இவர்தான்! நல்லா உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னே தெரியுது!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அர்ஷத் வர்சி (Arshad Warsi). இவர் தற்போது டொயோட்டா ஹீலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தை வாங்கியுள்ளார். இது சொகுசு பிக் அப் டிரக் (Luxury Pick Up Truck) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
அனேகமாக இந்தியாவில் டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக்கை வாங்கிய முதல் பிரபல நபர் இவராகதான் இருப்பார். புத்தம் புதிய டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக்கை, அர்ஷத் வர்சி டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மும்பை (Mumbai) நகரில் உள்ள அர்ஷத் வர்சியின் வீட்டில், டொயோட்டா டீலர்ஷிப் ஊழியர்கள், ஹீலக்ஸ் பிக் அப் டிரக்கை டெலிவரி செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை, அர்ஷத் வர்சியின் ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.
ஒயிட் பேர்ல், எமோஷனல் ரெட், சூப்பர் ஒயிட், க்ரே மெட்டாலிக் மற்றும் சில்வர் மெட்டாலிக் என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக் கிடைக்கிறது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதன் முக்கியமான வசதிகளில் ஒன்றாகும்.

லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக்கில் வழங்கப்படுகின்றன. செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக் வாகனத்தில், 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 204 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக் வாகனத்தில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. எனினும் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஹீலக்ஸ் பிக் அப் டிரக் வாகனத்தின் ஆரம்ப விலை 30.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 37.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அர்ஷத் வர்சி வாங்கியிருப்பது எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இவர் பிரபலமான நடிகர் என்பதால், அவர் வாங்கியிருப்பது டாப் வேரியண்ட் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. டாப் வேரியண்ட் ஆக இருக்கும்பட்சத்தில், அதன் ஆன் ரோடு விலை சுமார் 45 லட்ச ரூபாய் வரும்.


Click it and Unblock the Notifications








