பெற்றோர் மனசை குளிர வெச்ச இந்திய கிரிக்கெட் வீரர்! திடீரென வந்ததும் ஷோரூமில் கூடிய கூட்டம்!
அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), இந்திய கிரிக்கெட் வேகப்பந்து பந்து வீச்சாளர். சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் பந்து வீச்சாளராக உருவெடுத்து இருப்பவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவரான அர்ஷ்தீப் சிங், நடைபெற்றுவரும் ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்காக விளையாடி வருகிறார். மே 29ஆம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்கு எதிரான குவாலிஃபையர்-1 போட்டியில் கூட பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்காக பந்து வீசினார்.
முதல் ஓவர் வீசம் அளவிற்கு பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் விளங்குகிறார். ஆனால், இந்த போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் தோல்வியுற்ற நிலையில், அகமதாபாத்தில் நடைபெறும் குவாலிஃபையர்-2 போட்டிக்காக மற்ற வீரர்களுடன் அர்ஷ்தீப் சிங் பயிற்சி எடுத்து வருகிறார்.

இதற்கிடையில் தனது தாய், தந்தைக்கு டாடா கர்வ் (Tata Curvv) காரை வாங்கி தந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் குணா என்கிற பகுதியில் அர்ஷ்தீப் சிங் பிறந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் அங்குதான் வசித்து வந்தனர். அதன்பின், அர்ஷ்தீப் சிங்கின் தந்தை தர்ஷன் சிங்கிற்கு பணி மாறுதல் கிடைத்ததை அடுத்து, குணாவில் வசித்துவந்த குடும்பம் பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகருக்கு இடம் பெயர்ந்தது.
ஐபிஎல் தொடருக்கு மத்தியில் சண்டிகரில் உள்ள வீட்டிற்கு சென்று பெற்றோரை நலம் விசாரித்துள்ள கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், அடுத்தடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளுக்கு மத்தியில் பெற்றோரை சண்டிகரில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஷோரூமுக்கும் அழைத்து சென்று பிராண்ட்-நியூ கர்வ் காரை வாங்கி கொடுத்துள்ளார்.

தாய் பல்ஜித் கௌர் மற்றும் தந்தை தர்ஷன் சிங் உடன் அர்ஷ்தீப் சிங் காரை டெலிவிரி பெற வந்த போது ஷோரூமில் பெரிய கூட்டமே கூடிவிட்டது. மார்க்கெட்டில் டாடா கர்வ் பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் (Electric) என மூன்று விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், கர்வ் இவி எலக்ட்ரிக் காரை (Electric Car) அர்ஷ்தீப் சிங் வாங்கவில்லை. ஆனால், கர்வ் காரை பெட்ரோல் என்ஜின் உடன் பெற்றோருக்கு வாங்கி கொடுத்தாரா அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கி கொடுத்தாரா என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பெட்ரோல் என்ஜினிலேயே இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கர்வ் கிடைக்கிறது.
இந்த வகையில் பார்த்தால், 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கர்வ் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 116 எச்பி மற்றும் 260 என்.எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 123 எச்பி மற்றும் 225 என்.எம் டார்க் திறன் வரையிலும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 எச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அர்ஷ்தீப் சிங்கிற்கு டாடா கர்வ் காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. பெற்றோருக்கு மிகவும் பாதுகாப்பான காரை வாங்கி தரும் முயற்சியாக கர்வ் காரை வாங்கி கொடுத்துள்ளார். மோதல் சோதனைகளில் கர்வ் முழு 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற கார் ஆகும். டெலிவிரி பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இந்த காரை அர்ஷ்தீப் சிங் முன்பதிவு செய்திருப்பார்.


Click it and Unblock the Notifications








