3 கோடி ரூபா காரில் போன பிக்பாஸ் பிரபலம்! கையில குழந்தை மாதிரி என்னங்க அது! துணிய போட்டு மூடி கொண்டு போறாங்க!

இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi). ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போதும், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது, விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக இருக்கும்.

இந்த சூழலில், பிரபல நடிகை ஒருவர் மிகவும் விலை உயர்ந்த காரில், கையில் விநாயகர் சிலையுடன் பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Arti Singh Spotted In Range Rover

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஆகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த ரேஞ்ச் ரோவர் கார், மிகவும் விலை உயர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 2.48 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.75 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவை இரண்டின் ஆன்-ரோடு விலையும் (On-Road Price) 3 கோடி ரூபாய்க்கு மேல் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில், கையில் விநாயகர் சிலையுடன் பயணம் செய்த நடிகை, ஆர்த்தி சிங் (Arti Singh) ஆவார். இவர் மிகவும் பிரபலமான ஹிந்தி தொலைக்காட்சி நடிகை ஆவார்.

Arti Singh

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹிந்தி பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியிலும் கூட, ஆர்த்தி சிங் பங்கேற்றுள்ளார். சல்மான் கான் (Salman Khan) மற்றும் ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலரிடமும், ஆர்த்தி சிங் பயணம் செய்த ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஆனால் ஆர்த்தி சிங் பயணம் செய்தது ரேஞ்ச் ரோவர் காரின் எந்த வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆர்த்தி சிங் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்ப கூடியவர். அவர் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை வாங்கியிருந்தார் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

ஆர்த்தி சிங் வாங்கியது, மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டீசல் வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.62 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் தார் காரின் ராக்ஸ் (Roxx) என்ற மாடலை தனியாக விற்பனை செய்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 23.39 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆர்த்தி சிங் பயணம் செய்த ரேஞ்ச் ரோவர் கார், சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவை ஆகும். அத்துடன் இது ஆஃப்-ரோடு சாகச திறன்களிலும் தலைசிறந்த ஒரு கார் ஆகும். இதன் காரணமாகவே முரட்டுத்தனமான ரேஞ்ச் ரோவர் சொகுசு எஸ்யூவி காரை, விலையை எல்லாம் பொருட்படுத்தாமல், இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2025, 23:52 [IST]
English summary
Arti singh spotted in range rover luxury suv viral video check all details here
மேலும்... #ganesh chaturthi #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+