தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவத்தை பொதுமக்கள் செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பல லட்சக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருவதே சாலை விபத்துக்கள் நடைபெற மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம். இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

புதிய அபராத தொகைகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதே சமயம் இதனை முறையாக அமல்படுத்த வேண்டிய காவல் துறையினரும், போக்குவரத்து துறை அதிகாரிகளுமே கூட சில சமயங்களில் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

இந்த சூழலில் சீட் பெல்ட் அணியாத உதவி ஆர்டிஓ ஒருவரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அமிதாப் ராய் எனும் உதவி ஆர்டிஓ தனது அதிகாரப்பூர்வ மஹிந்திரா பொலிரோ காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்துள்ளார். அப்போது பொதுமக்களை அவரது காரை சுற்றி வளைத்துள்ளனர்.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

அத்துடன் ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் உதவி ஆர்டிஓ ஒருவரே சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். எனவேதான் அவரது காரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

இதன் காரணமாக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் உதவி ஆர்டிஓவிற்கு அபராதம் விதித்து ரசீது வழங்கினார். ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒரு குற்றத்திற்காக சாதாரண வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை காட்டிலும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு 2 மடங்கு அதிக அபராதம் விதிக்க முடியும்.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

அதாவது ஒரு போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு 500 ரூபாய் அபராதம் என வைத்து கொள்வோம். சாதாரண வாகன ஓட்டிகள் அந்த விதிமுறையை மீறினால் 500 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தினால் போதுமானது. ஆனால் அரசு அதிகாரிகளோ அல்லது காவல் துறையினரோ அந்த விதிமுறையை மீறினால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இவ்வாறான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அதிகாரிகள் சிலர் தொடர்ந்து விதிமுறையை மீறி கொண்டேதான் உள்ளனர். சீட் பெல்ட் அணியாத உதவி ஆர்டிஓ-வின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சம்பவம் காரணமாக பிலிபிட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தொடங்கி விட்டனர். தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் இதனை உறுதி செய்கின்றன.

தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?

தலைநகர் டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் உடனடியாக மாற வேண்டிய தருணம் இது. இல்லாவிட்டால் இது வாகன ஓட்டிகள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

Source: UP Tak/YouTube

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2019, 10:08 [IST]
English summary
ARTO Fined For Not Wearing Seat Belt. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+