Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- News
''அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!
சாலை பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு மஹிந்திரா தார் வாகனத்தை சகுதி மிகுந்த சாலையில் தானே இயக்கியது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு வாகனங்களை இயக்கி பார்ப்பதை மிகவும் விரும்பக்கூடியவர். இதனால் இவர் தாமாக வாகனங்களை இயக்கி மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளதை பார்த்திருக்கிறோம்.

இந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை மஹிந்திரா தாரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டமாகும்.

மேலும் இந்த மாவட்டம் மாநிலத்தில் உள்ள எந்தவொரு நெடுஞ்சாலை உடனும் இணைப்பில் இல்லை. இதனால் சாங்லாங்கில் விஜயநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை பணிகளை பார்வையிட காட்டுப்பாதையில் முதல்வர் பயணம் செய்துள்ளார்.

இதற்கு ஹெலிகாப்டர் மூலமாக கூட அவர் சென்றிருக்கலாம். ஆனால் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீதான அவரது ஆர்வமோ என்னமோ தெரியவில்லை, சாலை வழியாக சென்றுள்ளார்.
ஷாண்டோனில் நக் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவில் பார்க்கும்போது, இதனை சாலை என்று கூட சொல்ல முடியாது. அவ்வளவு கரடுமுரடான, சகுதி மற்றும் சேறு மிகுந்த காட்டு வழி சாலையாக காட்சியளிக்கிறது.

இதனால் தான் பெமோ காண்டு மஹிந்திரா தார் வாகனத்தை இயக்கி செல்ல தேர்வு செய்துள்ளார். மேலும் இத்தகைய ஆஃப்-ரோடு சாலையில் பயணம் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட முதல் அருணாச்சல பிரதேச முதல்வர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பயணத்தின்போது பல இடங்களில் எந்தவொரு வாகனத்தையும் இயக்கி செல்ல முடியாத அளவிற்கு இருந்த பாதைகளை வாகனத்தில் இருந்து வெளியே வந்து ஆட்களுடன் இணைந்து தற்காலிகமாக சீரமைத்தும் உள்ள பெமோ காண்டு இதுகுறித்து டுவிட்டரில், "வாகனத்திலும், கால்நடையிலும் மியாவோவிலிருந்து விஜயநகரத்திற்கு மறக்க முடியாத பயணம்" என பதிவிட்டுள்ளார்.

மாநில அமைச்சர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் அருணாச்சல பிரதேச முதல்வரின் இந்த அசாதாரண பயணம் சுமார் 157கிமீ தூரம் கொண்டதாக இருந்துள்ளது. இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் சாலையினை பார்வையிடவே தான் இந்த காட்டு சாலை மார்க்கத்தை தேர்வு செய்துள்ளதாக பெமோ காண்டு தெரிவித்துள்ளார்.

மேலும் நடைபெற்றுவரும் சாலை பணிகள் அடுத்த 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும் எனவும், சாலை வசதி வந்துவிட்டால், இந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சாகச பயணத்திற்கு பெமோ காண்டு ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பிரபலமான மஹிந்திரா தாரை பயன்படுத்தி இருப்பது மிகவும் சரியான தேர்வே. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14.15 லட்சம் வரையில் உள்ளன.