"ஏழைகளை குறிவைத்து பழி வாங்குவதை நிறுத்துங்கள்" - பாஜகவை எச்சரித்த டெல்லி முதல்வர்...!

ஏழை மக்களை குறி வைத்து பழி வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என பாஜக கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தலைநகர் டெல்லியின் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவிருக்கின்றது. ஆகையால், தற்போது டெல்லியில் தேர்தல் விழாக் கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக, டெல்லியை எப்படியாவது கையில் பிடித்துவிட என்ற நோக்கில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இத்துடன், காங்கிரஸ் கட்சியும் தனது பங்காக அவர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றது.

அந்தவகையில், தேர்தல் பரப்புரையை மேற்கொள்வது முதல் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பது வரை ஒரு கட்சியினருக்கு மற்ற கட்சியினர் சலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில் களப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மக்களை கவர பேனர் விளம்பரங்களை ஒவ்வொரு கட்சியினரும் கையிலெடுத்துள்ளனர். இதனால், டெல்லியின் பல நகரங்களில் புதிதாக பேனர் விளம்பரங்கள் காட்சியளிக்க தொடங்கியுள்ளன.

சாலைகள் மட்டுமின்றி ஆட்டோ மற்றும் பேருந்து போன்ற பொதுவாகனங்களிலும் அதுபோன்ற விளம்பரங்கள் காட்சியளிக்கின்றன. அவ்வாறு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்கின்ற வகையில், "ஐ லவ் கெஜ்ரிவால்" என்ற வாசகத்தை எழுதியிருந்த ஆட்டோவுக்கு போலீஸார் உச்சபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்று கட்சியினரை ஆதரிக்கும் வகையில் வாகனங்களில் பேனர் விளம்பரங்கள் இடம்பெறுவது முதல் முறையல்ல. அதேபோன்று, ஆம் ஆத்மி கட்சி மட்டுமின்றி பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயோட்சை விண்ணப்பதாரர்களும் இத்தகைய செயலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஆம் ஆத்மி கட்சியை மட்டும் குற்றவாளியாக சித்தரிப்பதைப் போல் குறிப்பிட்ட ஆட்டோவிற்கு அதிகபட்ச அபராதம் வழங்கப்பட்டிருப்பதாக அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது போலீஸின் அதிரடியில் சிக்கியிருப்பது டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

ராஜேஷ் கடந்த 15ம் தேதி கலிண்டி குஞ்ஜ் பகுதியில் இருந்து அப்போலோ மருத்துவமனை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸார், ராஜேஷின் ஆட்டோவை மடக்கி ரூ. 10 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை வழங்கினர்.

இதற்கு, ஆட்டோவில் "ஐ லவ் கெஜ்ரிவால்" என எழுதப்பட்டிருந்த வாசகத்தை அவர்கள் காரணமாக கூறினர். இதனால், அதிர்ச்சியுற்ற ஆட்டோ டிரைவர் ராஜேஷ், இதுகுறித்து டெல்லி நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.

தொடர்ந்து, தான் எந்தவொரு கட்சியின் பரப்புரையையும் பிரசுரிக்கவில்லை, எனக்கு பிடித்தமான வாசகத்தை மட்டுமே எழுதியுள்ளேன். இதை கடந்த வருடமே எழுதியதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தனது மனுவில் போலீஸார் அத்துமீறி அபராதம் விதித்திருப்பதாகவும், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார்.

இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஆம் ஆத்மி, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

இதற்கு, தேர்தல் ஆணையம் சார்பில், ஆட்டோ ஓட்டுநர் தேர்தல் விதியை மீறி கட்சி விளம்பரத்தை ஆட்டோவில் வைத்திருந்த காரணத்தால் இத்தகைய அபராதம் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்டோவில் அது போன்ற விளம்பரம் ஏதும் இல்லை. "ஐ லவ் கெஜ்ரிவால் என்றே எழுதப்பட்டிருந்ததாக ஆட்டோ டிரைவர் தரப்பு வழக்குரைஞர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திக்கப்பட்டது.

இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் "ஏழைகளை குறி வைப்பதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என எச்சரித்தார்.

தொடர்ந்து, "பாஜக-வினர் போலீஸை கொண்டு ஏழை ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்கு தொடுத்து வருவதாகவும்" குற்றம் சாட்டினார்.

மேலும், "அவரது ஒரே தவறு என்னவென்றால், அவர் ‘ஐ லவ் கெஜ்ரிவால்' என்று எழுதியதுதான். ஏழைகளுக்கு எதிரான இத்தகைய தீங்கிழைப்பு சரியல்ல. ஏழைகளுக்கு எதிராக பழிவாங்குவதை நிறுத்துமாறு நான் பாஜகவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். என்றார்.

முன்னதாக, இதேபோன்றதொரு நடவடிக்கையை டெல்லி போக்குவரத்துத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. அதில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறிப்பாக, இந்த சம்பவத்திலும் ஆம் ஆத்மி கட்சியே அதிகம் விதிமுறை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2020, 12:43 [IST]
English summary
Arvind Kejriwal Slams BJP For Auto Drivers Hefty Fine. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+