20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தும் ஓனர் உயிரை காப்பற்றிய ஹோண்டா சிட்டி! நன்றி கடனா என்ன பண்ணாரு தெரியுமா?

ஊட்டியில் விபத்துக்குள்ளான தனது ஹோண்டா சிட்டி காரை யூடியூபர் ஒருவர் மீண்டும் சரி செய்து பயன்படுத்தி விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காரை இவர் மீண்டும் சரி செய்து பயன்படுத்தி வருகிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரவிந்த் பிளாக்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் அரவிந்த். இவர் நாட்களுக்கு முன்னால் ஊட்டிக்கு தனது ஹோண்டா சிட்டி காரில் பயணம் செய்துள்ளார். வெள்ளை நிறத்தில் உள்ள இந்த காரில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இவர்களுக்கு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக காருக்குள் பயணத்தை இவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்தார்.

arvind vlogs honda city rescued

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தாலும் தனது உயரை காப்பாற்றிய இந்த காரை கிரேன் மூலமே தூக்க வேண்டிய தேவை இருந்தது. இதை இவர் கிரேன் மூலம் தூக்கி மீட்டுக் கொண்டு வந்தார். பொதுவாக ஒரு கார் விபத்தில் சிக்கினால் அந்த காரை அதன் உரிமையாளர் விற்று விடுவார்கள் அல்லது சரி செய்து வேறு யாருக்காவது கை மாற்றி விடுவார்கள். விபத்து ஏற்படுத்திய காரை மீண்டும் பயன்படுத்த பலர் தயங்குவார்கள்.

ஆனால் இது எல்லாம் போலியான ஒரு விஷயம் தான். விபத்து ஏற்படுத்திய கார் மீண்டும் மீண்டும் விபத்து ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்கிறார்கள். இப்படியான மூடநம்பிக்கை பலருக்கு இருக்கும் நிலையில், சற்று வித்தியாசமாக அரவிந்த் விளாக்ஸ் நடத்தி வரும் அரவிந்த் என்பவர் தனது உயிரை காப்பாற்றிய இந்த காரை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்து அதை சரி செய்து பயன்படுத்தி வருகிறார்.

arvind vlogs honda city rescued

இது மட்டுமல்லாமல் காரை சரி செய்த பின்பு விபத்து நடந்த இடத்திற்கு அந்த காரை எடுத்துச் சென்று அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை வெளியிட்டுள்ளார். விபத்துக்குள்ளாக போது அதை கிரேன் மூலம் மீட்கப்பட்ட வீடியோவையும் இதையும் இணைத்து இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகிறது. பலருடைய வீடியோவை பார்த்து அவரை பாராட்டி வருகிறார்கள்.

தற்போது மார்கெட்டில் விற்பனையாகி வரும் ஹோண்டா சிட்டி காரில் 6 ஏர்பேக்குகள் இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் போது காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த ஏர்பேக்குகள் பயன்படும். இதுபோக விபத்தை தடுக்க தடுப்பதற்காக ஏபிஎஸ் சிஸ்டம் இபிடியுடன் இணைந்து செயல்படுகிறது. இது போக இந்த காரில் ரோடு டிபார்ச்சர் மிட்டிகலேஷன் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ ஹைபிம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

arvind vlogs honda city rescued

மேலும் மலைப்பகுதியில் பயணிக்கும்போது தேவைப்படும் ஹில் ஸ்டார்ட் சிஸ்டம், லேண்ட் வாட்ச் கேமரா, ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் விபத்துக்குள்ளானாலும் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு எந்தவித ஆபத்து ஏற்படாது. மேலும் கார் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கும். இவரது கார் எப்படி விபத்துக்குள்ளானது என்ற விபரம் தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனம் விபத்தில் சிக்கிவிட்டால் அந்த வாகனத்தை விற்பனை செய்து விட்டு வேறு வாகனத்தை பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இதனால் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான கார்கள் விபத்தில் சிக்கி கார்களாகவே இருக்கும் என பலர் நம்புகிறார்கள். ஆனால் இது முற்றிலும் மூடநம்பிக்கை தான். ஒரு கார் ஒரு முறை விபத்தில் சிக்கி மீண்டும் அதை பயன்படுத்துவதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 13:20 [IST]
English summary
Arvind vlogs honda city car crashed in ooty rescued safely video gone viral
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X