சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை காண ஷாருக்கான் சாதாரண காரில் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

தடை செய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தி வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் (Shah Rukh Khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

இந்த சூழலில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை ஷாருக்கான் நேற்று (அக்டோபர் 21) சந்தித்தார். அப்போது அவர் சாதாரண கியா செல்டோஸ் (Kia Seltos) காரை பயன்படுத்தினார். ஷாருக்கான் சிறையை அடைந்தபோது, கியா செல்டோஸ் காரின் பின் இருக்கையில் இருந்து கீழே இறங்கினார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

ஷாருக்கான் பயன்படுத்திய கியா செல்டோஸ் சாதாரண கார் ஆகும். ஷாருக்கானுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மாருதி சுஸுகி ஆம்னிதான் (Maruti Suzuki Omni) அவரது முதல் கார். ஆனால் ஷாருக்கானிடம் தற்போது ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ஷாருக்கானும் மற்ற முன்னணி நடிகர், நடிகைகளை போலவேதான் இருக்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

ஷாருக்கானிடம் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), ஆடி ஏ8 எல் (Audi A8 L), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) என ஏராளமான விலை உயர்ந்த கார்கள் ஷாருக்கானிடம் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை சந்திக்க சாதாரண கியா செல்டோஸ் காரில் ஷாருக்கான் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

அத்துடன் ஷாருக்கான் கியா செல்டோஸ் காரில் ஏன் வந்தார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக சாதாரண கியா செல்டோஸ் காரில் ஷாருக்கான் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது விலை உயர்ந்த கார்களில் சென்றால், சாலையில் அந்த கார் தனித்து தெரியும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

ஆனால் கியா செல்டோஸ் கார் மற்ற கார்களுடன் எளிதாக கலந்து விடும். இந்திய சாலைகளில் தற்போது ஏராளமான கியா செல்டோஸ் கார்கள் ஓடிக்கொண்டுள்ளன. எனவே கியா செல்டோஸ் காரை ஷாருக்கான் தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை காண செல்வதால், எளிமையை கடைபிடிக்கவும் ஷாருக்கான் விரும்பியிருக்கலாம்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் ஷாருக்கான் பயன்படுத்திய கியா செல்டோஸ் கார் யாருடையது? என்பது உறுதியாக தெரியவில்லை. அது ஷாருக்கானுடையாக கூட இருக்கலாம். அல்லது வேறு ஒருவருடையதாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கியா செல்டோஸ் காரின் ஓனர்ஷிப் (Ownership) விஷயத்தை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

கியா செல்டோஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) உள்ளிட்ட கார்களுடன் கியா செல்டோஸ் போட்டியிட்டு வருகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

மேலும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி அஸ்டர் (MG Astor) காரும் கூட கியா செல்டோஸ் காரின் போட்டியாளர்தான். செல்டோஸ் காரின் அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் செல்டோஸ் மட்டுமல்லாது, சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்துமே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில் சொனெட் காரும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். ஆனால் அது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை சந்திக்க சாதாரண காரில் வந்த ஷாருக்கான்... காரணம் என்னனு தெரியுமா?

அதே சமயம் கியா கார்னிவல் கார், எம்பிவி ரகத்தை சேர்ந்தது. இது விலை உயர்ந்த காராக இருக்கிறது. எனினும் அதற்கு ஏற்ற வகையில் ஏராளமான சொகுசு வசதிகள் கியா கார்னிவல் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறந்த மாற்றாக கியா கார்னிவல் கார் கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Aryan khan drugs case shah rukh khan uses kia seltos during mumbai s arthur road jail visit
Story first published: Friday, October 22, 2021, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X