இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை... புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது அதிகமாகிவிட்டது. இதனால் சாலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் தண்டனை எனச் சட்டம் இருந்தால்தான் தடுக்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

இன்று உலகம் முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதுதான். ஒருவர் மது போதையில் இருந்தால் அவரால் நிதானத்தில் இருக்க முடியாது. கவனம் செலுத்தி வாகனத்தை ஓட்ட முடியாது. அதனால் உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் மது போதையில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என உள்ளது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

மது போதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் விபத்தில் சிக்குவதற்கான பல வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் போலீஸ் அதிகாரிகள் மக்கள் மது போதையில் வாகனம் ஒட்டி வருவதற்கான அதிக வாய்ப்புள்ள நேரங்களில் குறிப்பிட்ட சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். அதன்படி போலீசார் கையில் ப்ரீத் அனலைசர் என்ற கருவியை வைத்திருப்பார்கள். அந்த கருவியில் மது போதையில் இருப்பவர் ஊதினால் அவர் எந்த அளவிற்கு மது குடித்துள்ளார் என்பதைக் காட்டிவிடும்.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

அவர் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது குடித்திருந்தால் அவர் மது போதையில்தான் இருக்கிறார் என அர்த்தம். அப்படி அந்த கருவியில் அவர் அதிக மது போதையில் இருப்பது தெரியவந்தால் அவர் மீது அந்தந்த நாடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். ஆனால் சமூக ஆர்வலர்கள் பலர் உலகம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் எனக் குரல் எழுந்து வருகிறது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

இந்நிலையில் இங்கிலாந்து அரசு தற்போது அந்நாட்டில் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒருவர் அந்நாட்டில் மிதமிஞ்சிய அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இந்திய மதிப்பில் ரூ2.4 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது மட்டுமல்ல அவர் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

அதன்படி ப்ரீத் அனலைசரில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தாலே இந்த அபராதம் அல்லது சிறை தண்டவை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல குடிபோதையில் ஒருவர் வாகன ஓட்ட முயன்று அப்பொழுது போலீசார் அவரை பிடித்தாலும் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் என புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

இது மட்டுமல்ல குடிபோதையில் வாகனம் ஓட்டும் முயற்சியில் 10 ஆண்டுகளில் இருமுறை ஒருவர் சிக்கிவிட்டால் அவருக்கு 12மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வாகனம் ஓட்டை தடை செய்யவும் இந்த சட்டத்தின் படி அதிகாரம் உள்ளது. இது மட்டுமல்ல அதிகாரிகள் வாகன சோதனையில் ப்ரீத் அனலைசர் சோதனையில் ஈடுபடும்போது அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை அல்ல6 எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் என அந்த சட்டம் சொல்கிறது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

இதுமட்டுமல்ல இது போல ஒத்துழையாமைக்கு அதிகபட்சமாக 1 ஆண்டு வரை வாகனம் ஓட்டை தடை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்ல இதற்கெல்லாம் மேல் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி மற்றவருக்கு உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் மற்றும் 2 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது மிகப்பெரிய ஆபத்தான விஷயம் தான். இதனால் ஏராளமான உயிரிழப்புகள் கூட நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்காக போலீசார் வாகன சோதனை, குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம், தண்டனை உள்ளிட்டவற்றை வழங்கினால் இந்த குற்றம் குறைந்த பாடில்லை. சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்குக் குடிபோதையே முக்கியமான காரணமாக இருக்கிறது.

இனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ2.4 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை . . . புதிய சட்டத்தைக் கொண்டு வரும் அரசு

இப்படியான குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க அபராதத்தையும், தண்டனைகளையும் அதிகப்படுத்த வேண்டும் அப்படிச் செய்தால் குற்றங்கள் குறையும். இந்தியாவிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிகமான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனப் பலர் குரல்களை எழுப்பி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Article Published On: Monday, August 1, 2022, 11:50 [IST]
English summary
As per the new law drunk and drives could face rupees 2 4 lakh fine
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+