ரெய்ஸே மோட்டோவின் பிராண்ட் அதலெட்டாக ஆஷிஷ் ராவ்ரேன்! யார் இவர்? என்ன மாதிரியான போட்டியில் கலந்திருக்கிறார்?
பிரீமியம் தர டயர் உற்பத்தி நிறுவனம் ரெய்ஸே மோட்டோ (Reise Moto). இந்த நிறுவனம், தன்னுடைய பிராண்ட் விளையாட்டு வீரராக இந்தியாவைச் சேர்ந்த கிராஸ்-கன்ட்ரீ ரேலி பந்தய வீரர் (Cross-Country Rally Racer) ஆஷிஷ் ராவ்ரேனை நியமித்திருப்பதாக அறிவித்துள்ளது. இவர் ஓர் புகழ்பெற்ற டக்கர் ரைடர் ஆவார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆஷிஷ் ராவ்ரேனே இந்த பதவியில் நீடிப்பார். இதற்கான ஒப்பந்தமே தற்போது போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இனி ஆஷிஷ் ராவ்ரானே தான் பங்கேற்கும் அனைத்து மோட்டார் ஸ்போர்ட்ல் (Moto Sports)களிலும் ரெய்ஸ் மோட்டோவை பிரதிநிதிப்படுத்த இருக்கின்றார்.

உள் மற்றும் வெளிநாடு என சர்வதேச அளவில் பங்கு கொள்ள இருக்கும் மோட்டார்ஸ் போர்ட்ஸ்களிலும் விளையாட்டு வீரர் ரெய்ஸே மோட்டோவையே பிரதிநிதிப்படுத்த இருக்கின்றார். இதன் வாயிலாக தங்களுடைய பிராண்டின் இமேஜ் சர்வதேச சந்தையில் வளர்ச்சி காணும் என ரெய்ஸே மோட்டோ நம்புகின்றது.
போட்டிகள் நிறைந்து காணப்படும் இந்திய இருசக்கர வாகன டயர் சந்தையில் இளம் டயர் நிறுவனமாக தன்னுடைய கால் தடத்தை ரெய்ஸே மோட்டோ பதித்து இருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இருசக்கர வாகனம் தொடங்கி ஸ்போர்ட்ஸ் டைப் டூ-வீலர்கள் வரை என அனைத்திற்குமான டயர்களையும் நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

அந்தவகையில், டூரர் ரக டூ-வீலர், ஸ்ட்ரீட் நேக்கட் ரக மோட்டார்சைக்கிள், அட்வென்சர் ரக பைக் என பலதரப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களுக்கான டயர்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. துடிப்பான ரைடர்களுக்கு ஏற்ற டயர்களாக தன்னுடைய தயாரிப்பை ரெய்ஸே மோட்டோ விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய ஓர் பிராண்டே இந்தியரை தன்னுடைய பிராண்ட் விளையாட்டு வீரராக நிர்ணயித்துள்ளது. ஆஷிஷ் ராவ்ரேன், மிக சிறந்த இந்திய ரேஸர் ஆவார். சர்வதேச அளவிலான போட்டிகள் பலவற்றில் கலந்துக் கொண்டு வெற்றி வாகையை அவர் சூடி இருக்கின்றார். டக்கர் ரேலி, ஆப்பிரிக்கா ஈகோ ரேஸ், 2019 எஃப்ஐஎம் பஜா உலக சாம்பியன்ஷிப் சீரிஸ் உள்ளிட்ட போட்டிகளிலேயே இவர் வெற்றி கண்டிருக்கின்றார்.
ரெய்ஸே பிராண்டின் அதிகாரப்பூர்வ ரேசராக ஆஷிஷ் ராவ்ரானே நிர்ணயிக்கப்பட்டு குறித்து, அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகிய யோகேஷ் மஹன்சாரியா கூறியதாவது, "ஆஷிஷ் ராவ்ரானே எங்கள் பிராண்டின் ரேசரராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரேஸ் போட்டிகளில் அவருக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் அனுபவமே எங்களை வழிநடத்த இருக்கின்றது.
இதன் வாயிலாகவே எங்களுடைய டயர்களை அதிக செயல்திறன்மிக்கதாக நாங்கள் வழங்க இருக்கின்றோம். சர்வதேச அளவில் மிகவும் சவாலான போட்டிகளில் கலந்துக் கொண்டவர் ஆஷிஷ். இந்த அனுபவமே அவருக்கு தனித்துவமான நுண்ணறிவுகளை வழங்கி இருக்கின்றது. இத்தகைய அனுபவத்தின் வாயிலாகவே வாடிக்கையாளர்களை நாங்கள் கவர இருக்கின்றோம்" என்றார்.
ரெய்ஸே மோட்டோவுடன் இணைந்தது குறித்து ஆஷிஷ் ராவ்ரானே தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். அவர் கூறியதாவது, "நான் ரெய்ஸே மோட்டோவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டக்கார் 2024 இல் இந்நிறுவனத்தின் பிரதிநிதியாக போட்டியில் பங்கேற்க இருக்கின்றேன். டிரெயில்ஆர் சீரிஸ் போட்டியில் நான் ஏற்கனவே பங்கேற்றிருக்கின்றேன்.
இது ஒரு வகையில் வசதியானதே. சவால்களை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். அதிக செயல்திறன் கொண்ட டயர்களை ஆர்வமுள்ள ரைடிங் சமூகத்தினருக்கு வழங்குவதற்கான ரெய்ஸேவின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்த அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதிலும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் எனக்கு அதிக மகிழ்ச்சியே" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் மிக சமீபத்திலேயே தன்னுடைய கால் தடத்தை ரெய்ஸே மோட்டோ பதித்து இருந்தாலும், வாகன ஆர்வலர்கள் மத்தியில் நல்ல பிராண்ட் எனும் பெயரை அது பெற தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆஷிஷ் ராவ்ரேனேவை தன்னுடைய பிராண்ட் ஸ்போர்ட்ஸ் வீரராக அது நிர்ணயித்துள்ளது. இதன் வாயிலாக ரேஸை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களை அது பெறும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications