சாதாரண மஹிந்திரா காரை செகண்ட் ஹேண்டில் வாங்கிய நடிகர்! யார்னு தெரிஞ்சதும் ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் மக்கள்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi). இவர் கிட்டத்தட்ட நம்பியாரை போன்ற குணம் கொண்டவர். திரையில் வில்லனாக தோன்றினாலும், நிஜத்தில் இவரது குணமே வேறு.

ஆம், மற்ற பெரும்பாலான நடிகர்களை போல் அல்லாமல், மிகவும் எளிமையான வாழ்க்கையை ஆஷிஷ் வித்யார்த்தி வாழ்ந்து வருகிறார். அத்துடன் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வதையும் ஆஷிஷ் வித்யார்த்தி வழக்கமாக வைத்துள்ளார். அங்கு கிடைக்கும் உணவுகளை ருசிப்பது, உள்ளூர் மக்களின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது என ரசனையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்.

Ashish Vidyarthi Mahindra XUV700

இந்த பயணங்களை எல்லாம் தனது யூடியூப் சேனலிலும் (YouTube Channel) அவர் போஸ்ட் செய்து வருகிறார். இந்த வரிசையில் ஆஷிஷ் வித்யார்த்தி மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) வாங்கிய விளக்கும் வீடியோ (Video) ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனால் ஆஷிஷ் வித்யார்த்தி வாங்கியிருப்பது புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அல்ல. மாறாக அது யூஸ்டு கார் (Used Car) ஆகும். இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள ஒரு நடிகர் செகண்ட் ஹேண்ட் காரை (Second Hand Car) வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Ashish Vidyarthi Buys Used Mahindra XUV700

காரை டெலிவரி பெற்ற பிறகு, சம்பிரதாயப்படி பூஜைகள் செய்யப்படுவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை, நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி என்ன விலைக்கு (Price) வாங்கினார்? என்பதை அவர் வீடியோவில் தெரிவிக்கவில்லை.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 14.03 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.57 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். இது சற்று விலை உயர்ந்த கார்தான். எனினும் ஆஷிஷ் வித்யார்த்தி போன்ற நடிகர்களுக்கு சாதாரணமான ஒரு காராகவே இது கருதப்படுகிறது.

அடாஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அஸிஸ்டன்ஸ் சிஸ்டம்தான் (ADAS - Advanced Driver Assistance Systems) மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முக்கியமான ஹைலைட் ஆகும். இதுதவிர இந்த காரின் டேஷ்போர்டில் 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர். இவை எல்லாம் தவிர, ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள், சோனி ஸ்பீக்கர்கள் போன்ற வசதிகளும் கூட மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 இன்ஜின் ஆப்ஷன்களுமே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆப்ஷனும், டீசல் வேரியண்ட்களில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆஷிஷ் வித்யார்த்தி அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடியவர். இந்த பயணங்களை அவர் சாலை மார்க்கமாக மேற்கொள்வதாக இருந்தால், அவருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 நிச்சயம் சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2023, 18:14 [IST]
English summary
Ashish vidyarthi buys used mahindra xuv700 video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+