ஏர்போர்டில் இருந்து வருவதற்கு பஸ் ரெடி! சிஎஸ்கே ஜெர்சியில் இடம்பிடித்த பிரபல பஸ் & லாரி தயாரிப்பு கம்பெனி!

அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் வாகன (Commercial Vehicles) உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஹிந்துஜா (Hinduja) குழுமத்தின் கீழ் 1948ஆம் ஆண்டில் இருந்து அசோக் லேலண்ட் செயல்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனமான இது டிரக்குகள், பேருந்துகள், ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

நமது சென்னைக்கு அருகே எண்ணூர் பகுதியில் கூட அசோக் லேண்ட் நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில் மட்டும் 7 உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டிருக்கும் அசோக் லேலண்டிற்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் இங்கிலாந்திலும் தொழிற்சாலை உள்ளது. இந்த அளவிற்கு பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் அசோக் லேண்ட் நிறுவனத்தின் பெயரை இந்த சீசன் ஐபிஎல் (IPL)-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings - CSK) அணியின் ஜெர்சியில் காணலாம்.

ashok leyland sponsor with chennai super kings

உலகளவில் பிரபலமான டி20 கிரிக்கெட் (Cricket) தொடரான ஐபிஎல்-இல் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான சிஎஸ்கே உடன் கூட்டணி சேர்ந்திருப்பதை அசோக் லேலண்ட் உறுதிப்படுத்தி உள்ளது. சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக மாறியுள்ள அசோக் லேலண்டின் பெயர் சிஎஸ்கே ஜெர்சியில் சிங்கம் லோகோவிற்கு இணையாக, வீரர்களின் வலதுபக்க மார்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்துஜா குழுமத்திற்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையேயான பிணைப்பு ஆனது கிட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர்ந்துவரும் ஒன்றாகும். அசோக் லேலண்டை போன்று, இந்துஜா குழுமத்தின் ஓர் அங்கமாக வகிக்கும் கல்ஃப் ஆயில் (Gulf Oil) சிஎஸ்கே உடன் கூட்டணியில் இருந்து வருகிறது.

ashok leyland sponsor with chennai super kings

சென்னையில் நடந்த அசோக் லேலண்ட் மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு இடையேயான கூட்டணி அறிமுக நிகழ்ச்சியில் அசோக் லேண்டின் தலைவரான தீராஜ் இந்துஜா, அசோக் லேலண்டின் நிர்வாக இயக்குனர் (MD) ஷேனு அகர்வால், சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் (Ruturaj Gaikwad) மற்றும் சிஎஸ்கே அணி வீரரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டனுமான ஆயிஷ் மாத்ரே (Ayush Mhatre) கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சி (Jersey) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 'சிஎஸ்கே ரசிகர் பேருந்து' என்கிற பெயரில் பேருந்து ஒன்றையும் அசோக் லேலண்ட் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது. அநேகமாக இதைதான் தொடரின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் வீரர்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள்-டக்கர் (Double-decker) பேருந்தான இதில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ் தோனி (MS Dhoni), கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் (Sanju Samson)-இன் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றப்படி, அசோக் லேலண்டின் இந்த பேருந்தை பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அசோக் லேலண்ட் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் உலகளவில் பிரபலமான சிஎஸ்கே அணியுடன் இணைந்திருப்பது நிச்சயமாக அதன் வாகனங்களை மேலும் பல வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும். மேலும், இந்த நடவடிக்கையால் அசோக் லேலண்ட் மற்றும் அதன் கமர்ஷியல் வாகனங்களுக்கு மேலும் பல வெளிநாட்டு மார்க்கெட்கள் திறக்கலாம். அசோக் லேலண்டின் லோகோ கொண்ட சிஎஸ்கே ஜெர்சி உடன் அணி வீரர்கள் மைதானத்தில் விளையாட உள்ளதை நினைத்தாலே இப்போதே ஆர்வம் தாங்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, March 6, 2026, 21:04 [IST]
English summary
Ashok leyland announced a partnership with chennai super kings check all details here
மேலும்... #ashok leyland #ipl cricket #chennai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+