இந்த கம்பெனி லாரியை ஓட்டும் டிரைவர்களுக்கு ஜாக்பாட்! ரூ10 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணலாம்!
அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்த வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இனிய அசோக் லேலண்ட் வாகனத்தை ஓட்டும் டிரைவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது .இதற்காக ஒப்பந்தத்தையும் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இன்சூரன்ஸ் டிரைவர்களுக்கு என்ன பயன் எந்த நேரத்தில் இந்த இன்சூரன்ஸ் பணத்தை அவர்கள் கிளைம் செய்ய முடியும் இதற்கு டிரைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது "சாரதி சுரக்ஷா" பாலிசி என்ற புதிய இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பாலிசியை அந்நிறுவனம் பெயரிடப்படாத குரூப் பர்சனல் விபத்து பாலிஸியாக அறிவித்துள்ளது. இந்த பாலிசியின் படி அசோக் லேலண்ட் வாகனங்களை ஒட்டும் அனைத்து டிரைவர்களுக்கும் இந்த பாலிசி பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனம் ஹெவி கமர்சியல் வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் வாகனங்கள் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஹெவி கமர்சியல் வாகனங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களை தினம்தோறும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் ஓட்டி வருகிறார்கள். இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் வாகனம் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாலிசியின் படி இந்தியாவிற்குள் இந்நிறுவனத்தின் வாகனத்தை யார் ஓட்டி சென்று விபத்தில் சிக்கினாலும் அவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிளைம் செய்ய முடியும். இந்த இன்சூரன்ஸ் பாலிசியை கிளைம் செய்ய விபத்து ஏற்பட்டு அதில் ஓட்டுனருக்கு உயிரிழப்புகளோ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்பட்டிருக்க வேண்டும்.
இதன்படி பாதிக்கப்பட்டவர்கள் கிளைம் அப்ளை செய்தால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உயிரிழப்பு ஏற்படும் நபர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டவர்களுக்கும் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியும்.
இது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவரின் குழந்தை படித்துக் கொண்டிருந்தால் அவர்களது படிப்பிற்கான செலவையும் க்ளைம் செய்து கொள்ள இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது. அசோக் லேலண்ட் நிறுவனம் தங்கள் நிறுவன தயாரிப்புகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பையும் எதிர்கால உறுதியையும் வழங்கும் வகையில் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு வாகன உரிமையாளரோ அல்லது அந்த வாகனத்தை ஓட்டும் டிரைவரோ எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. அந்த கட்டணத்தை முழுவதும் அசோக் லேலண்ட் நிறுவனமே இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனத்திற்கு செலுத்தி விடும். ஒரே இன்சூரன்ஸில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அசோக் லேலண்ட் வாகன ஓட்டிகளுக்கும் பிரீமியம் செலுத்தப்படும்.
இதில் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் அல்லது அவர்களது குடும்பத்தார் இந்த இன்சூரன்ஸ் கிளைம் கோரி விண்ணப்பம் செய்யலாம். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்தும் சரியாக இருந்தால் இன்சூரன்ஸ் கிளைம் பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கும் நேரடியாக வழங்க முடியும்.
இந்திய சாலைகளில் அதிகம் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏகப்பட்ட மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக இப்படியான ஒரு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வாகன உரிமையாளர் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் இருக்கும்போது அதிலும் டிரைவருக்கும் சேர்த்து இன்சூரன்ஸ் எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக நிறுவனம் இப்படியான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இது கனரக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். கனரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இப்படியான திட்டங்களை அறிவிப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். இதை மற்ற நிறுவனங்களும் பின்பற்றினால் ஓட்டுனர்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








