வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

Written By:

சென்னையை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் தனது மனைவியுடன் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரேஸ் உலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார் ஓட்டுவதில் கைதேர்ந்த அவருக்கு கார் விபத்திலேயே மரணம் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

இந்த நிலையில், அவர் கார் விபத்தில் உயிரிழந்ததற்கான காரணம் அதிர்ச்சியை கூட்டுகிறது. நேற்று நள்ளிரவு நட்சத்திர ஓட்டலில் உணவு அருந்திவிட்டு, தனது மனைவியுடன் பிஎம்டபிள்யூ இசட்4 என்ற ஸ்போர்ட்ஸ் ரக காரில் வீடு திரும்பி உள்ளார்.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் வழியாக அவர் வீடு திரும்பி உள்ளார். அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அங்கிருந்த வேகத்தடை ஒன்றை கவனிக்காமல் அஸ்வின் வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

மரத்தில் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இருப்பினும், அஸ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் பயணித்த கார் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மாடல். அதேநேரத்தில், சூழ்நிலைதான் அவர்களது உயிரை காவு வாங்கியதற்கு மற்றொரு காரணமாகி உள்ளது.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

விபத்து நடந்தவுடன், அஸ்வின் சுந்தரும், அவரது மனைவியும் கார் கதவை திறந்து கொண்டு வெளியில் வருவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், கார் மரத்தில் மோதிய வேகத்தில் கதவுகள் நசுங்கி போனதால் திறக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

மறுபுறம் காரில் எரிபொருள் அதிகமாக இருந்ததால், மோதி வேகத்தில் தீப்பிடித்தது மட்டுமல்லாமல், தீ கார் முழுவதும் வேகமாக பரவி விட்டது. இதனால், இருவரின் முயற்சிகளும் தோல்வி அடைந்து உயிரிழந்துள்ளனர். டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாலும், பிஎம்டபிள்யூ கார்கள் ரன் ஃப்ளாட் டயர்களுடன் வருவதால், இதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

அதேநேரத்தில், காரை ஓட்டி வந்த அஸ்வின் சுந்தர் மது அருந்திவிட்டு ஓட்டி வந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர். உடல் கூராய்வுக்கு பின்னர் இந்த விஷயம் குறித்து முழுமையான தகவல் தெரிய வரும்.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமாக்களில் கலக்கிய பால்வாக்கர் போன்றே அஸ்வின் சுந்தரும் கார் விபத்தில் உடல் கருகி பலியாகி உள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாச வேலை காரணமாக இருக்குமா என்ற ஒரு கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

அதுமட்டுமின்றி, காரில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா என்பதையும் ஆய்வு செய்ததால்தான் இந்த விபத்திற்கான காரணம் முழுமையாக தெரிய வரும். ஏனெனில், பால்வாக்கர் மரணத்திற்கு காரில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அஸ்வின் சுந்தரின் கார் விபத்துக்குள்ளானது குறித்து சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான் உண்மையான காரணம் தெரிய வரும்.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

இளம் வயதில் இருந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதீத ஆர்வம் காட்டிய அஸ்வின் சுந்தர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மோட்டார் ஸ்போர்ட்ஸில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது 31 வயதாகும் அஸ்வின் சுந்தர், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கார் பந்தயங்களில் பங்கேற்றவர்.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

அஸ்வின் சுந்தர் மறைவிற்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை சேர்ந்தவர்கள் இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவியின் மரணம் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதா கார் பந்தய வீரர் கருண் சந்தோக் தெரிவித்துள்ளார். தேசிய மோட்டார் பந்தய சம்மேளனத் தலைவர் அக்பர் இப்ராஹீம் உள்ளிட்டோரும் இரங்கலையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கி உயிரிழந்த அஸ்வின் சுந்தர்...!!

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் அதிவேக கார் விபத்துக்கள் தொடர்கதையாக உள்ளன. இதுபோன்ற கார் விபத்துக்களை தடுக்கவும், தவிர்க்கவும் போலீசார் ரோந்துப் பணிகளையும், தணிக்கைகளையும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இப்போது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிக வாசிக்கப்படும் செய்திகளை தொடர்ந்து படிக்கலாம்.

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்...
அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்...
அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்...
அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்...

அதிகம் பார்வையிடப்பட்ட படத் தொகுப்புகள்...

  • இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் 750 பைக்கின் படங்கள்!
  • புதிய ஹூண்டாய் சொனாட்டா காரின் படங்களின் தொகுப்பை காணலாம்.
  • புதிய ஆடி ஏ3 சொகுசு காரின் டெஸ்ட் டிரைவின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களை இங்கே காணலாம்.
  • புதிய டாடா டிகோர் காரின் உயர்தர படங்களின் தொகுப்பை கண்ணார கண்டு ரசியுங்கள்!!
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Ashwin Sundar's deadly Crash: What Happened?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark