லிஸ்ட்டில் சென்னை பெயர் இல்லை... இதை பார்த்த பிறகாவது பெங்களூருவை தேடி போவீங்களா?

பெங்களூரு (Bengaluru) என்றதுமே நமக்கு முதலாவதாக ஞாபகத்திற்கு வருவது தொழிற்நுட்ப துறையில் அந்த நகரம் அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகும். இதன் காரணமாகவே, பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் சமீப காலங்களில் அதிகளவில் பெருகி உள்ளன. ஆனால், பெங்களூரு என்றதும் நமக்கு இன்னொன்றும் சட்டெர்ன ஞாபகத்திற்கு வரும். அதுதான், பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் ஆகும். இதனை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், ஆசியா (Asia)-விலேயே மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த நகரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஒரு இடத்திற்கு மக்கள் அதிகமாக இடம்பெயருகிறார்கள் என்றாலே அந்த இடத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதில் முக்கியமானது, போக்குவரத்து நெரிசல் ஆகும். ஏனெனில், மக்கள் அதிகமாக ஓர் இடத்தில் குடியேறுகிறார்கள் என்றாலே அவர்களது போக்குவரத்துக்கான வாகனங்களையும் கொண்டு வருகிறார்கள் என்றுதான் அர்த்தம் ஆகும்.

asia s worst cities for traffic

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை இங்கிலாந்தின் இலண்டன், ஜப்பானின் டோக்கியோவில் இருந்து நமது சென்னை வரையிலான மாநகராட்சிகள் எதிர்கொண்டுள்ளன. ஆதலால், அதனை சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதுதான் முக்கியமாகும். சென்னை மாநகராட்சியின் சில அதிரடி முடிவுகளினால் போக்குவரத்து நெரிசல் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது.

ஆனால், பெங்களூருவில் நிலைமையே வேறு. பெங்களூரு மாநகராட்சி பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் குறைந்தப்பாடில்லை. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரை நாடி தொடர்ச்சியாக வந்துக்கொண்டே இருக்கும் பிற பகுதி மக்களின் எண்ணிக்கை ஆகும். இதன் காரணமாக, ஆசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நம்பர் ஒன் நகரமாக பெங்களூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

asia s worst cities for traffic

டாம்டாம் (TomTom) என்கிற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, பெங்களூருவில் வெறும் 10கிமீ பயணத்திற்கு சராசரியாக 28 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுகிறதாம். இதன் காரணமாக, பெங்களூருவாசிகள் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 132 மணிநேரத்தை கூடுதலாக போக்குவரத்து நெரிசலில் செலவிடுவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கொண்டுவரப்படும் குடியிருப்புகள் மற்றும் தொழில் வளாகங்களினால் தான் முக்கியமாக அதற்கேற்றவாறு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவதில்லை என இந்த ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்திலும் இந்தியாவை சேர்ந்த புனே நகரம் இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

asia s worst cities for traffic

புனேவில் 10கிமீ பயணத்திற்கு சராசரியாக 27 நிமிடங்கள் 50 வினாடிகள் செலவிடப்பட வேண்டியுள்ளதாக கூறும் இந்த ஆய்வானது ஆசியாவில் உள்ள 55 நாடுகளின் முக்கியமான 387 நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கியமான மைய பகுதியை தேர்வு செய்து, அதனை சுற்றி 5கிமீ தொலைவிற்கு வாகனங்களை ஓட்டிப் பார்த்து இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளனர். மேலும், இந்த ஆய்வுகள் யாவும் 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆசியாவிலேயே மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் பட்டியலில் முதல் 2 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்திருப்பது அதிர்ச்சி கலந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தொழிற்நுட்ப வளர்ச்சியினால் பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்றால், தொழிற்சாலை வளர்ச்சியினால் புனேவில் பொருளாதாரமும், அதேநேரம் மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் எடுத்து பார்த்தால், இலண்டன் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2025, 15:38 [IST]
English summary
Asias worst cities for traffic bengaluru and pune at top 2 places
மேலும்... #india #traffic
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X