இயக்குநர் ஷங்கர் படத்துல கூட இப்படிஒரு காரை பார்த்திருக்க மாட்டீங்க! ரோட்லயும் போகும் வானத்துலயும் பறக்கும்!
அமெரிக்காவில் இன்னும் சில நாட்களில் ரோட்டிலும் ஓடும், ஆகாயத்துலயும் பறக்கும் கார் பொது பார்வைக்கு அறிமுகமாகவுள்ளது. இதை எல்லாம் சினிமாக்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளாக பார்த்த நமக்கு இதுதற்போது நிஜமாகப்போகிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சி நடக்கும் இதில் பெரும்பாலும் தொழிற்நுட்ப ரீதியிலான நிறுவனங்கள் பங்கேற்கும். ஆனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பது என்பது அரிதான விஷயமாகும். ஆனால் இந்தாண்டு இந்த கண்காட்சியில் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் காரை முதன் முறையாக பொது பார்வைக்குக் கொண்டு வரப்போகிறது. அடுத்ததாக ஆடி நிறுவனம் இந்த கண்காட்சில் தனது விர்ச்சுவல் ரியாலிட்டியால் உருவான பொழுது போக்கு சிஸ்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இது போக சில கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதில் முக்கியமான விஷயம் இந்த கண்காட்சியில் அஸ்கா என்ற நிறுவனம் பங்கேற்கிறது. இந்நிறுவனம் புதிய வகையான கார் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த கார் சாலையிலும் பயணிக்கும் அதே நேரம் விமானம் போல பறக்கவும் செய்யும். இந்த கார் மொத்தம் 4 சீட்டர் கொண்ட காராகும். இது பறக்கும் போது எலெக்ட்ரிக் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் அம்சம் கொண்ட காராக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் இந்நிறுவனம் இந்த காரின் முழு சைஸ் புரோட்டோ டைப் வாகனத்தை வெளியிடுகிறது. இந்த கார் எலெக்டரிக் காராகவும் குவாட்காப்டராகவும் உருவாகியுள்ளது.
இந்த காரில் முன்பே சொன்னது போல 4 சீட்டர் கொண்ட காராக இருக்கும். அதே நேரம் இந்த காரில் வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங், ஷார்ட் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங், ரேஞ்ச் எக்ஸ்டென்டர் மற்றும் ஃபுல் எலெக்ட்ரிக் சிஸ்டம், லித்தியம் அயான் பேட்டரி மற்றும் இன்ஜின், ஆகியன இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜில் 400 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
இந்த கார் சாலையில் செல்லும் போது 112 கி.மீ வேகம் வரை செல்லும், இந்த கார் விற்பனைக்காக எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை புரோட்டோடைப் அறிமுகத்திற்குப் பிறகு இந்நிறுவனம் தொடர்ந்து இந்த காரின் தொழிற்நுட்பத்தை மேம்படுத்த வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் தயாரானதும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாகச் சாலையில் ஓடிக்கொண்டே பறக்கும் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டால் ஒரு காலத்தில் சயிண்டிஃபிக் ஃபிக்ஷன் எனச் சொன்ன விஷயங்கள் எல்லாம் நிஜமாக நடக்கத் துவங்கிவிடும். இப்படியாகப் பறக்கும் கார்களை எல்லாம் நாம் திரைப்படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளாகத் தான் பார்த்திருப்போம். ஆனால் இது எல்லாம் தற்போது நம் கண் முன்னே உண்மையாகத் தோன்றப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications








