ஹெல்மெட் அணியாததால் மறித்த காவல் உதவி ஆய்வாளரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

Written By:

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருவரை தடுத்து நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டரின் சட்டையை இளம்பெண் ஒருவர் கிழித்து, தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, அவரை வயிற்றில் எட்டி உதைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

தலைநகர் டெல்லியில் உள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று போக்குவரத்து காவல் அதிகாரிகள் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளம்பெண் ஒருவர் பின் இருக்கையில் அமர்ந்த நிலையில், அவரின் ஆண் நண்பர் ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தார்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

இவர்கள் ஹெல்மெட் அணியாததால் போக்குவரத்து போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்று உள்ளிட்ட சான்றுகளை கேட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

அந்த இருவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மெட் அணியாததால் அவர்களுக்கு அபராதம் விதித்து அதற்கான ஒப்புகை சீட்டினை காவல்துறையினர் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

இதனை ஏற்காத இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சோனம் (வயது 26), என்பவர் ஒப்புகை சீட்டினை அளித்த காவலரின் சட்டை காலரைப் பிடித்து இழுத்ததோடு, தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து அவரின் சீருடையையும் கிழித்துள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

சம்பவத்தில் ஈடுபட்டது பெண் என்பதாலும், அந்த சமயத்தில் பெண் காவல் அதிகாரிகள் உடன் இல்லாததாலும், காவல்துறையினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பெண் காவலர் ஒருவரை சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

உடனடியாக சம்பவ இடத்திற்கு பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். விசாரிக்க வந்த அந்த பெண் காவலரை வயிற்றில் காலால் ஓங்கி எட்டி உதைத்துள்ளார் அந்த இளம்பெண் சோனம்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

இதில் அந்த பெண் உதவி ஆய்வாளர் நிலை தடுமாறி தரையில் விழுந்துள்ளார், பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

இருசக்கர வாகனத்தில் வந்த சோனம் (வயது 26) மற்றும் அவரின் ஆண் நண்பர் அமித் (வயது 28) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாக தெரியவந்தது.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

கைது செய்யப்பட்ட சோனம் மற்றும் அமித் ஆகிய இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத முறையில் நடந்து கொள்தல், அரசு ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும் ஜூன் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சப்-இன்ஸ்பெக்டரை காலால் எட்டி மிதித்த இளம்பெண்..!

இளம்பெண் ஒருவர் பணியில் இருந்த காவல்துறையினரை பொது இடத்தில் வைத்து சட்டையை கிழித்து, அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
Read in Tamil about young girl kicks ladc sub-inspector on duty for stooping her vehicle

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more