முதல்வருக்கு "லாம்போர்கினி" கார் பரிசு! வெறும் ரூ10 லட்சத்தில் லாம்போர்கினியை செய்த இளைஞர்!

அசாம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தானே செய்த லாம்போர்கினி காரை அம்மாநில முதல்வருக்குப் பரிசாக அளித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

லாம்போர்கினி கார் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. நம்மில் பலர் அந்த கார் வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டி பார்க்க வேண்டும் என நினைப்போம். சிலர் லாம்போர்கினி காரை வாங்க வேண்டும் என நினைப்பார்கள். மேலும் சிலர் லாம்போர்கினி காரை வாழ்நாளில் முறையாவது பார்த்து விட மாட்டேனா என நினைப்பார்கள். உண்மையில் லாம்போர்கினி காருக்கு உலக அளவில் அவ்வளவு கிராக்கி இருக்கிறது. இந்த காரில் உள்ள அம்சங்கள், அதிலுள்ள சொகுசு வசதிகளை விட அதன் டிசைன் மற்றும் கார் இயங்கும் போது வரும் சத்தம் மக்களுக்குப் பிடித்திருக்கிறது.

முதல்வருக்கு லாம்போர்கினி கார் பரிசு! வெறும் ரூ10 லட்சத்தில் லாம்போர்கினியை செய்த இளைஞர்!

இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியைச் சேர்ந்தவர் நூருல் ஹாக்கியூ, 31 வயது இளைஞரான இவர் பாங்கா பஜார் என்ற பகுதியில் கராஜ் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த காராஜில் கார்களை ரிப்பேர் செய்வது, மாடிஃபிகேஷன் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து சம்பாதித்து வருகிறார். இவருக்கு நீண்ட நாட்களாக லாம்போர்கினி கார் வாங்கி ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இது நிறைவேறாத ஆசையாகவே இருந்தது. பல வகையில் முயற்சி செய்தும், வாழ்நாளில் ஒரு முறைகூட லாம்போர்கினி காரை ஓட்ட முடியவில்லை.

இதனால் விரக்தியிலிருந்த நூருலுக்கு எப்படியாவது லாம்போர்கினி காரை ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. இதற்காக அவர் மூளையில் உதித்த சிந்தனை தான் தானே ஒரு லாம்போர்கினி காரை உருவாக்கினால் என்ன என்பது. இதையடுத்து அவர் தானே எப்படி லாம்போர்கினி காரை உருவாக்குவது என யோசித்தார். பின்னர் அதற்காகப் பல யூடியூப் வீடியோக்களை பார்த்தபோது அதன் மூலம் கிடைத்த தகவலின்படி இவருக்கு மாருதி ஸ்விஃப்ட் காரை மாற்றலாம் என்ற யோசனை கிடைத்தது.

அதன்படி இவர் ஒரு மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரை மாடிஃபிகேஷன் செய்ய முடியும் என யோசித்தார். அதற்காக அவர் செகண்ட் ஹேண்டில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்கினார். இந்த காரை வைத்து அவர் தன் கற்பனையில் உள்ள ஒரு லாம்போர்கினி காரை உருவாக்க முயற்சி செய்தார். இதற்காக மாடிஃபிகேஷனிற்கு மட்டும் ரூ6.2 லட்சம் வரை செலவு செய்தார். இந்த லாம்போர்கினி காரை உருவாக்க கார் உட்பட மொத்தம் சுமார் ரூ10 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

இறுதியாக அவர் தன் கற்பனையில் உள்ள "லோ பட்ஜெட்" லாம்போர்கினி காரை உருவாக்கிவிட்டார். இந்த காரை அவர் அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிற்குப் பரிசளித்துள்ளார். இதற்காக அவர் முதல்வரை நேரில் சந்தித்தார். முதல்வரும் இவரை வரவேற்று உபசரித்து இவரது பரிசை ஏற்றுக்கொண்டார். மேலும் இவரது திறமையையும் பாராட்டியுள்ளார். இந்த செய்தி மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்தாக நூரூல் தானாகவே ஃபெராரி கார் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த காரை அவர் உருவாக்கினால் அதுவும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் மாடிஃபிகேஷன் பிரியர்களின் கவனத்தை இவரது லாம்போர்கினி கார் இழுத்துள்ளது. இவர்கள் எல்லாம் அடுத்து ஃபெராரி மாடிஃபிகேஷனை காண ஆர்வமாக உள்ளனர். இந்த கார் உங்கள் உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

இது போல் நீங்கள் உங்கள் காரை மாடிஃபிகேஷன் செய்ய நினைத்தால் எப்படி மாடிஃபிகேஷன் செய்வீர்கள்? என்னென்ன விஷயங்களை எல்லாம் காரில் பயன்படுத்துவீர்கள்? எந்த மாதிரியான காரை உருவாக்க நினைப்பீர்கள் இந்த தகவலை நீங்கள் கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Assam Mechanic made look alike lamborgini from swift car gifted to State CM
Story first published: Monday, December 5, 2022, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X