டாடா சுமோ எஞ்சினுடன் ஹெலிகாப்டர்.. படிக்காத மேதையின் அசத்தல் தயாரிப்பு!

By Saravana

டாடா சுமோ எஞ்சின் பொருத்தப்பட்ட சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த மெக்கானிக்கான ஷர்மா.

போக்குவரத்து வசதியற்ற தனது மலை கிராமத்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலிலும், ஆர்வத்திலும் இந்த ஹெலிகாப்டரை உருவாக்கி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஷர்மா.

கிராமத்து விஞ்ஞானி

கிராமத்து விஞ்ஞானி

அசாம் தலைநகர் குவஹாட்டியிலிருந்து 450 கிமீ தொலைவிலுள்ள ஷியாம்ஜுலி என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சிவகோடி ஷர்மா. தற்போது 40 வயதாகும் ஷர்மா, பொது நலனுக்காக இந்த ஹெலிகாப்டர் திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன் கையிலெடுத்துள்ளார்.

வெல்டர்

வெல்டர்

ஷர்மாவிற்கு சொந்தமாக வெல்டிங் ஒர்க்ஷாப் இருக்கிறது. வாகன பழுதுபார்ப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் வரும் வருமானத்தை சேகரித்து, தனது கனவு தயாரிப்பாக இந்த ஹெலிகாப்டரை உருவாக்கியிருக்கிறார். தனது ஹெலிகாப்டருக்கு பவன் புத்திரா என்று பெயரிட்டு அழைக்கிறார்.

டாடா சுமோ எஞ்சின்

டாடா சுமோ எஞ்சின்

வெல்டிங் தெரியுமென்பதால், மிக திறமையாக உலோகத் தகடுகளை தனது வெல்டிங் ஒர்க்ஷாப்பில் கத்தரித்து இந்த ஹெலிகாப்டரில் பொருத்தியிருக்கிறார். மேலும், டாடா சுமோ காரின் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியில் பொருத்தியிருக்கிறார்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த ஹெலிகாப்டரில் கார் இருக்கைகளை பொருத்தியிருக்கிறார். இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக வடிவமைத்துள்ளார் ஷர்மா.

ஷர்மா நம்பிக்கை

ஷர்மா நம்பிக்கை

இந்த ஹெலிகாப்டர் தரையிலிருந்து 30 அடி முதல் 50 அடி வரையிலான உயரத்தில் பறக்கும் என்று ஷர்மா தெரிவித்துள்ளார்.

அதிகாரி ஒத்துழைப்பு

அதிகாரி ஒத்துழைப்பு

விமானவியல் துறை பட்டம் பெறாமலேயே, ஷர்மா தயாரித்திருக்கும் இந்த ஹெலிகாப்டரின் இயங்கு தன்மை குறித்து பரிசோதிப்பதற்காக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உள்பட பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடிதம் எழுத இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

பிரதமருக்கும் தகவல்

பிரதமருக்கும் தகவல்

ஷர்மா தயாரித்திருக்கும் ஹெலிகாப்டர் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, உள்ளுர் வாசிகளும் கடிதம் எழுதியுள்ளனர்.

காத்திருப்பு

காத்திருப்பு

இந்த ஹெலிகாப்டரின் எஞ்சினை ஒரேயொரு முறை மட்டும் ஷர்மா இயக்கி பார்த்துள்ளார். ஆனால், விமான போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் நோக்கில், இதுவரை இயக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் இந்த ஹெலிகாப்டரை இயக்கிப் பார்க்க ஷர்மா மட்டுமில்லை, அந்த கிராமமே ஆவலோடு காத்திருக்கிறது.

அடுத்த கனவு

அடுத்த கனவு

ஷர்மாவின் ஹெலிகாப்டர் கனவு ஓரளவு நிறைவேறியிருக்கும் நிலையில், அவரது அடுத்த கனவு குறித்து வினவியபோது, தனது மகன் விமான பைலட்டாக வரவேண்டும் என்பதே எனது எதிர்கால கனவு என்று தெரிவிக்கிறார். ஷர்மா போன்ற ஆர்வமுடைய கண்டுபிடிப்பாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

வீடியோ

ஷர்மா உருவாக்கியிருக்கும் ஹெலிகாப்டரை வீடியோவில் காணலாம்.

Photo Credit: ANI And Youtube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Automobile mechanic Chandra Sharma of remote Shyamjuli village in Assam's Dhemaji district has built a helicopter using a Tata Sumo diesel engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X