ஜேம்ஸ் பாண்ட் உபயோகித்த கார் ஏலத்திற்கு வருகிறது?

By Ravichandran

ஜேம்ஸ் பாண்ட்டால் உபயோகிக்கப்பட்ட ஆஸ்டன் மார்டின் கார் ஏலத்திற்கு வருகிறது.

பிரித்தானிய கார் உற்பத்தி நிறுவனமான ஆஸ்டன் மார்டின் உலகின் தலைசிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம், அவ்வபோது பிரத்யேக கார்களையும் தயாரிக்கும் வழக்கம் கொண்டுள்ளது.

‘ஸ்பெக்டர்’ படத்திற்கு பிரத்யேகமான டிபி10;

‘ஸ்பெக்டர்’ படத்திற்கு பிரத்யேகமான டிபி10;

2015 அக்டோபர் 26 அன்று வெளியான ‘ஸ்பெக்டர்' என்ற திரைபடத்திற்கு என ஸ்பெஷலாக 10 டிபி10 கார்கள் மட்டுமே தயாரிக்கபட்டது.

இயான் புரொடெக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கபட்ட இந்த ஸ்பெக்டர் திரைபடத்தில், டேனியல் கிரெய்க், கிரிஸ்டோஃபர் வால்ட்ஸ், லியா செய்டூஸ், பென் விஷா, நவோமி ஹாரிஸ், டேவ் பாடிஸ்டா, மோனிகா பெல்லூசி, ரால்ஃப் ஃபியன்னெஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆஸ்டன் மார்டின் டிபி10 மாடல் காரை, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் கிரெய்க், ‘ஸ்பெக்டர்' திரைபடத்தில் உபயோகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 24-வது படமாகவும், டேனியல் கிரெய்க்-கின் நான்காவது படமாகவும் ‘ஸ்பெக்டர்' திரைப்படம் விளங்குகிறது.

ஏலத்தில் கிடைக்கும் டிபி10;

ஏலத்தில் கிடைக்கும் டிபி10;

இந்த ஆஸ்டன் மார்ட்டின் டிபி10 கார், 2016-ஆம் ஆண்டில் ஏலத்திற்கு கிடைக்கின்றது என்ற நல்ல செய்தி ஒரு புறம் இருக்க, ஒரு கெட்ட செய்தியும் உள்ளது.

சாலையில் உபயோகிக்க தடை;

சாலையில் உபயோகிக்க தடை;

இந்த படத்தில் உபயோகிக்கபட்ட டிபி10 மாடல் காரை வாங்குபவர், அதை சாதாரண சாலையில் பயன்படுத்த முடியாது. கட்டாயமாக உபயோகிக்க ஆசைபட்டால், ரேஸ் டிராக்கில் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த ஸ்பெஷலான கார்கள் சாலையில் இயக்குவதற்காக தயாரிக்கப்படவில்லை.

எந்த ஒரு நபரும், எந்த வாகனத்தையும், சாலைகளில் உபயோகிக்க விரும்பினால், அந்தந்த நாடுகளில் உள்ள சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உற்பத்தி நெறிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆஸ்டன் மார்ட்டின் டிபி10 அவ்வகையில் தயாரிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின், பிற அமைப்புகள்;

இஞ்ஜின், பிற அமைப்புகள்;

இந்த டிபி10 கார், ஆஸ்டன் மார்ட்டினின் வி8 வாண்டேஜ் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நேச்சுரலி ஆஸ்பிரேடட் 4.8 லிட்டர், வி-8 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த டிபி10 காரின் எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர்கள் முற்றிலுமாக வேறுபட்டுள்ளது.

இது வருங்கால ஆஸ்டின் மார்டின் கார்களின் வடிவமைப்பிற்கு உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருங்கால அறிமுகம்;

வருங்கால அறிமுகம்;

இதோடு மட்டுமல்லாமல், ஆஸ்டன் மார்டின் நிறுவனம் தங்களின் டிபி9 மாடல் காரின் அடுத்த மாடல் காரை அறிமுகபடுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

டிபி11 என்று பெயரிடப்பட உள்ள புதிய மாடல், டர்போ சார்ஜ்ட், 6.0 லிட்டர் வி12 இஞ்ஜின் கொண்டுள்ளதாக இருக்கும். அதிக பிரேக் ஹார்ஸ் பவரை வெளிபடுத்தும் என எதிர்பார்க்கபடும் இந்த டிபி11, எரிபொருள் சிக்கனம் கொண்ட காராக விளங்கும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 31, 2015, 14:52 [IST]
English summary
Aston Martin To Auction The DB10 In 2016. British carmaker Aston Martin will auction one of the ten DB10 models, which were specifically made for the James Bond film, 'Spectre'. Since only ten cars were ever made, it will be a very exclusive vehicle to own.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+