ரூ.10 கோடியில் புதிய அஸ்டன் மார்ட்டின் கார் வாங்கிய துபாய் போலீஸ்!
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்காக சூப்பர் மற்றும் பிரிமியம் கார்களை துபாய் போலீசார் அடுத்தடுத்து வாங்கி வருகின்றனர். லம்போ அவென்டேடார், ஃபெராரி எஃப்எஃப் ஆகிய கார்கள் உள்பட துபாய் போலீசார் வைத்திருக்கும் கார்கள் குறித்து ஏற்கனவே ஒரு தொகுப்பை வழங்கினோம்.
இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 ஆடம்பர கார் ஒன்றையும் துபாய் போலீசார் வாங்கியிருக்கின்றனர். லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்ட இந்த கார் மொத்தமே 77 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதில், ஒன்றை துபாய் போலீசார் வாங்கிவிட்டனர்.
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதிசக்திவாய்ந்த வி12 எஞ்சின் 750 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. தற்போது துபாய் போலீசில் இருக்கும் பவர்ஃபுல் கார் இதுதான். இந்த காரின் விலை ரூ.9.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் போலீஸ் கார்

அஸ்டன் மார்ட்டின் ஒன்-77

அஸ்டன் மார்ட்டின் ஒன்-77

அஸ்டன் மார்ட்டின் ஒன்-77

அஸ்டன் மார்ட்டின் ஒன்-77



Click it and Unblock the Notifications








