அனாதையாக கேட்பாரற்று கிடக்கும் அஸ்டன் மார்டின் சூப்பர் கார்.. இது உங்க அபார்ட்மென்டானு கொஞ்சம் பாருங்க!
விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான அஸ்டன் மார்ட்டின் ரேபிடே ஸ்போர்ட்ஸ் கார் (Aston Martin Rapide Sportscar) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக நின்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சாலையோரங்களில் வாகனங்கள் அனாதையாகக் கேட்பாரற்றுக் கிடப்பது இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், ஆட்டோ, டூ-வீலர் அல்லது மிகவும் பழைய வாகனங்களை மட்டுமே நம்ம ஊரில் நம்முடைய ஊரில் கேட்பாரற்ற நிலையில் பார்க்க முடியும். இது வழக்கமான ஒன்றும்கூட. எனவேதான் இதுமாதிரியான வாகனங்களைப் பார்க்கும்போது பலருக்கு பெரிய அளவில் ஆச்சரியம் ஏற்படுவதில்லை.

இந்த மாதிரியான சூழலிலேயே ஆண்டு கணக்கில் அஸ்டன் மார்ட்டின் ரேபிடே எனும் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று கேட்பாரற்று அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்திருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மும்பை நகரத்திலேயே இந்த ஆச்சரியமிகு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
காரின் நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையிலேயே அந்த காரின் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு இருக்கின்றன. ஆகையால், கை விடப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த அந்த காரின் உரிமையாளர் விபரங்களை அறிந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஆண்டு கணக்கில் அந்த வாகனம் ஒரே இடத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதேபதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அந்த காரை உரிமையாளர் சரியாக லாக்கூட செய்யவில்லை என்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. எனவே காரின் உள்ளே யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்கிற சூழலே இருக்கின்றது. மேலும், அந்த காரை ஓர் போர்வைக் கொண்டும் போர்த்தவில்லை. ஆகையால், முழுமையாக தூசியால் அந்த காரின் அழகு மறைக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், காரின் கேபினுக்குள்ளும் தூசிகள் படர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இதனால், இன்னும் சில மாதங்களில் இது பாழடைந்த வாகனமாக மாறும் நிலை உள்ளது. அதேவேளையில், பார்க்கிங்கில் இருப்பதனால் இது வெயில் மற்றும் மழையினால் ஏற்படும் சேதங்களைச் சந்திக்கவில்லை. இது மட்டும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.

அஸ்டன் மார்ட்டின் ரேபிடே ஓர் செடான் வகை ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.29 கோடிக்கும் அதிகம் ஆகும். இரண்டு விதமான தேர்வுகளில் இந்த கார் மாடல் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மிகக் குறைவான நபர்களே இந்த காரை இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார். அஸ்டன் மார்டின் ரேபிடே கார் மாடலில் 6.0 லிட்டர் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 470 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இந்த எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த கியர்பாக்ஸே அனைத்து வீல்களுக்கும் இயக்க திறனை அந்த காருக்கு அனுப்பி வைக்கின்றது. இத்தகைய சூப்பரான காரையே அதன் உரிமையாளர் தற்போது அனாதையாக விட்டுச் சென்று இருக்கின்றார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விதிமீறல் அல்லது வேறு ஏதேனும் ஆவண சிக்கல் காரணமாகவே இந்த காரை அதன் உரிமையாளர் கைவிட்டிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே வாகனங்கள் சில நாட்டில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. குறிப்பாக, இதுமாதிரியான வாகனங்களை விமான நிலையங்களிலேயே அதிகம் காண முடியும். விஜய் மல்லையா போன்ற பெரும் தொழிலதிபர் வங்கி கடன் மோசடியைச் செய்துவிட்டு தப்பி செல்லும்போது இவ்வாறே அவர்களின் வாகனங்களை கை விட்டு செல்வர்.


Click it and Unblock the Notifications









