ஜோதிடம் பார்ப்பவரின் சொகுசு வாழ்க்கை!! ரூ.1 கோடியில் புது கார்... பிக்பாஸ் வீட்டுக்கு போகும் வாய்ப்பு!
கர்நாடகாவை சேர்ந்த பிரபல சோதிடர் ஆர்யவர்தன் குருஜி புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை வாங்கியுள்ளார். இந்த கன்னட ஜோதிடரை பற்றிய கூடுதல் விபரங்களையும், ரேஞ்ச் ரோவரில் எந்த காரை இவர் வாங்கியுள்ளார் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மார்க்கெட்டில் எத்தனை கார் விற்பனையில் இருந்தாலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் உருவாக்கும் ரேஞ்ச் ரோவர் கார் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷலானது தான். கம்பீரமான தோற்றத்துடன், அட்வான்ஸான டெக்னாலஜிகளை கொண்டதாக ரேஞ்ச் ரோவர் கார்கள் விளங்குகின்றன. இதனாலேயே இந்த கார்களை சினிமா நட்சத்திரங்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.

அதேபோல், மற்ற பணக்காரர்கள் மத்தியில் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில், நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஜோதிடத்திலும், எண் கணிதத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக மாநிலம் முழுவதும் பிரபலமாகிவரும் ஆர்யவர்தன் குருஜி அவர்கள் புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி உள்ளார்.
ஜோதிடர் ஆர்யவர்தன் குருஜியை பற்றி மேலும் சொல்ல வேண்டுமென்றால், கர்நாடகாவின் ஹசான் என்கிற பகுதியில் பிறந்தவரான இவர் தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 46. கர்நாடகாவில் பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவருடன் தொடர்பில் இருக்கின்றனர். அதாவது, ஆர்யவர்தனிடம் கேட்ட பின்பே எது ஒன்றையும் செய்யும் செல்வந்தர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

இதனால், இவருக்கு சினிமா பிரபலங்களின் நட்பை பெறுவதில் பெரியதாக எந்த சிரமமாக இல்லை. இதன் மூலமாக, கடந்த 2022ஆம் ஆண்டில் கன்னட பிக்பாஸ் 9வது சீசனில் ஜோதிடர் ஆர்யவர்தன் குருஜி கலந்துக் கொண்டார். இவ்வாறு கர்நாடகாவில் நாளுக்கு நாள் பிரபலமாகிவரும் இவர் தனது ஸ்டேட்டஸை மேலும் உயர்த்திக் கொள்ளும் வகையில் புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார்.
இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் வேலர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக் என மொத்தம் 4 விதமான ரேஞ்ச் ரோவர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ரேஞ்ச் ரோவர் எவோக் காரை ஜோதிடர் ஆர்யவர்தன் குருஜி வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.67.90 லட்சமாக உள்ளது. பெங்களூர் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தால் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வந்துவிடும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் விற்பனை செய்யப்படுகிறது. எந்த என்ஜின் உடன் வாங்கினாலும் இந்த ரேஞ்ச் ரோவர் காரின் விலை ஒன்றே. ஆனால், இதில் எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் எவோக் காரை ஜோதிடர் ஆர்யவர்தன் குருஜி வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. எவோக் காரில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
2.0 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் கடைசியாக கடந்த ஜனவரி மாதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. சாண்டோரினி பிளாக், ட்ரைபெகா ப்ளூ, கோரிந்தியன் பித்தளை மற்றும் ஃபுஜி வெள்ளை என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் எவோக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.1 கோடியில் கார் வாங்கியுள்ளார் என்றால், ஜோதிடர் ஆர்யவர்தன் குருஜி எந்த அளவிற்கு கர்நாடகாவில் பிரபலமானவராகவும், பணக்கார வாடிக்கையாளர்களை கொண்டவராகவும் உள்ளார் என்பதை அறியலாம். இவர் வாங்கியிருக்கும் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் ஆனது அளவில் நன்கு நீளமானது. இருப்பினும், இந்த காரில் 5 பேர் மட்டுமே சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









