சிறுநீரிலிருந்து காபி... ஸ்காட் கெல்லியின் விந்தையான விண்வெளி அனுபவங்கள்!

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி தனது ஓர் ஆண்டு விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பியிருக்கிறார். மிக நீண்ட நாள் விண்வெளியில் இருந்த அமெரிக்கர் என்ற பெருமையுடன் பூமிக்கு திரும்பியிருக்கும் ஸ்காட் கெல்லி பல சுவாரஸ்யமான அனுபவங்களை வெளியிட்டிருக்கிறார்.

அவர் ஏன் விண்வெளியில் நீண்ட நாள் தங்கியிருந்தார் என்பதற்கான காரணங்களையும், அவர் எடுத்த சில வித்தியாசமும், ஆச்சரியங்களும் நிறைந்த விண்வெளி புகைப்படங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நோக்கம்

நோக்கம்

செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முதல் கட்ட முயற்சிதான் இது. விண்வெளிக்கு செல்லும்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தவதற்காகவே, 'விண்வெளியில் ஓர் ஆண்டு' என்ற திட்டத்துடன் ஸ்காட் கெல்லியை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பி வைத்தது.

நீண்ட நாள் பயணம்

நீண்ட நாள் பயணம்

விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் மிதக்கும் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் ஸ்காட் கெல்லி 340 நாட்கள் தங்கியிருந்து திரும்பியுள்ளார். அவருடன் மற்ற விண்வெளி வீரர்களான ரஷ்யாவை சேர்ந்த மிகாலி கொர்னியன்கோவும், செர்ஜரி வால்கோவும் நேற்று சோயூஸ் விண்வெளி ஓடத்தின் மூலமாக பூமிக்கு திரும்பினர்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ஈர்ப்பு விசை அற்ற நிலையில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்களின் மனநிலை மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இரத்த ஓட்டம், கண் பார்வை போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகின்றன. மேலும், எலும்பு அடர்த்தி குறைபாடு மற்றும் தசை நார்களிலும் குறைபாடுகள் உண்டாகின்றன. இதுகுறித்த ஓர் நீண்ட ஆய்வை கெல்லியை வைத்து நாசா செய்ய இருக்கிறது.

 மருத்துவ பரிசோதனைகள்

மருத்துவ பரிசோதனைகள்

ஸ்காட் கெல்லி நேற்று பூமிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு நாசா திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த ஓர் ஆண்டுக்கு அவர் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. அடுத்த 6 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்ற நாசா முடிவு செய்துள்ளது.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

ஸ்காட் கெல்லியை விண்வெளிக்கு அனுப்பியதில் கூடுதல் ஆதாயம் உள்ளது. ஸ்காட் கெல்லி இரட்டையர்களில் ஒருவராக பிறந்தவர். அவருடன் பிறந்த மற்றொருவரான மார்க் கெல்லியும் விண்வெளி வீரர்தான். மேலும், விண்வெளிக்கு சென்ற முதல் இரட்டையர்கள் ஸ்காட் கெல்லியும், அவரது சகோதரர் மார்க் கெல்லியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், நாசாவுக்கு லாபம் ஒன்றும் இருக்கிறது.

 ஜீன் அமைப்பு

ஜீன் அமைப்பு

ஸ்காட் கெல்லியின் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை, மார்க் கெல்லியின் ஜீன் அமைப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் நாசா முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, ஸ்காட் கெல்லியின் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் எளிதாக கண்டறியும் வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஸ்காட் கெல்லியின் உடல் எடை மற்றும் எலும்பு அடர்த்தி ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மைய ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தங்கும் விண்வெளி வீரர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டரை மணி நேரம் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். இல்லையெனில், இன்னும் கூடுதல் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்குமாம்.

ரிஸ்க்...

ரிஸ்க்...

விண்வெளியில் இருப்பதைவிட, பூமிக்கு திரும்பும்போதுதான் விண்வெளி வீரர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, பூமிக்கு திரும்பும்போது, அசைவுகள் குறைவானதால் சோம்பேறியாகிவிட்ட ரத்த நாளங்கள், பூமி ஈர்ப்பு விசைக்குள் நுழைந்ததும், கால்களுக்கு வரும் ரத்தத்தை மேல்நோக்கி திரும்பி செலுத்தும் திறனை இழந்துவிடுகின்றன. இதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய ரிஸ்க் என்று கூறலாம். வாந்தி, மயக்க உணர்வுகளை தரும். இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ குழுவினரின் உதவியுடன் அவர்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன.

சுவாரஸ்யங்கள்

சுவாரஸ்யங்கள்

மரக் கூடாரத்தில் இருப்பதைவிட விண்வெளியில் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார். அத்துடன், தனது சிறுநீரிலிருந்து எடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரில் காபி தயாரித்து குடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அங்கிருந்தவர்களுடன் விளையாடி பொழுதை கழித்துள்ளார்.

முக்கிய பங்கு

முக்கிய பங்கு

ஸ்காட் கெல்லியின் விண்வெளிப் பயணம் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என விண்வெளி ஆராய்ச்சித் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

படங்கள்

படங்கள்

அதிக ரிஸ்க் எடுத்து இந்த பயணத்தை முடித்திருக்கும் ஸ்காட் கெல்லி, விண்வெளியில் இருந்தபோது பல்வேறு சுவாரஸ்ய அனுபவங்களையும் சந்தித்திருக்கிறார். அதுதொடர்பாக, அவர் வெளியிட்ட புகைப்படங்கள், விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஜூன் 22,2015

ஜூன் 22,2015

அவரது பயணத்தின் 87வது நாள் எடுக்கப்பட்ட படம். துருவ ஒளியை மிக அட்டகாசமான கோணத்தில் நேரில் ரசித்து அவர் வெளியிட்ட படம்.

ஸ்காட் கெல்லியின் விந்தையான விண்வெளி அனுபவங்கள்!

கிழக்கு மத்தியதரைகடலை ஒட்டிய நிலப்பகுதி விளக்கொளியில் ஜொலிபப்பதை விண்வெளியிலிருந்து எடுத்து அவர் வெளியிட்ட படம்.

ஆகஸ்ட் 15, 2015

ஆகஸ்ட் 15, 2015

அடுத்து ஒரு துருவ ஒளி ஏற்பட்டதை கண்குளிர கண்டதுடன், யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற நோக்கில் அவர் டுவிட்டரில் வெளியிட்ட படம்.

ஆகஸ்ட்29, 2015

ஆகஸ்ட்29, 2015

கிழக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட சூறாவளியை கெல்லியின் சக விண்வெளி வீரர் கிமியா எடுத்த படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

இரவு வணக்கம்

இரவு வணக்கம்

பயணத்தின் 206வது நாள் மினுக்கும் நட்சத்திரங்களுடன் கூடிய படத்தை இரவு வணக்கத்துடன் வெளியிட்டிருந்தார்.

சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனம்

விண்வெளியில் மட்டுமல்ல, பூமியிலிருந்தும் சிறப்பான கோணத்தில் சூரிய அஸ்தமனத்தை காண முடியும் என்று அவர் நேற்று வெளியிட்ட புகைப்படம்.

தாயகம் திரும்பினார்

தாயகம் திரும்பினார்

கஜகஸ்தான் நாட்டிலிருந்து நேற்று விமானம் மூலமாக தாயகம் திரும்பினார் கெல்லி. விண்வெளி வரலாற்றில் கெல்லியின் விண்வெளிப் பயணம் முக்கியமானதாக அமையும் என்று கருதப்படுகிறது.

Photo Credit: Scott Kelly Facebook Page

Article Published On: Thursday, March 3, 2016, 13:17 [IST]
English summary
NASA Astronaut Scott Kelly Returns Safely to Earth after One-Year Mission.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+