ஜோசியம் பார்ப்பவர் வாங்கிய ரேஞ்ச் ரோவர் சொகுசு கார்.. இதோட விலையை கேட்டு பொறாமைப்படும் கிளி ஜோசியக்காரர்கள்!

கிளி ஜோசியம் எல்லாம் டிரெண்டுலையே இல்ல. ஜோசியக் காரர்கள் இப்போலாம் ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணுற மாதிரி, ஆன்லைன்லையே மக்களுக்கு ஜோசியம் பார்க்கத் தொடங்கிட்டாங்க. ஆமாங், மருத்துவதற்கு ஆன்லைனில் அறிவுரைகளைக் கூறுவதைப் போல ஜோசியத்தையும் சிலர் ஆன்லைன் வாயிலாக பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

அப்படியான ஓர் தளமே ஆஸ்ட்ரோ டால்க். இந்த தளத்தின் உரிமையாளரே தற்போது இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அவர் அவருடைய இன்ஸ்டா கணக்கின் வாயிலாக உறுதியும் செய்திருக்கின்றார்.

Astrotalk founder range rover evoque

அவர் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான ரேஞ்ச் ரோவர் எவோக் சொகுசு எஸ்யூவி ரக காரையே வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலை புதிதாக இந்தியாவில் வாங்க வேண்டும் ரூ. 73.07 லட்சத்தை நாம் செலவழிக்க வேண்டி இருக்கும்.

இதோடு நிற்காது, ஏனெனில், இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 1 கோடியை நெருங்கும். இத்தகைய மாபெரும் விலைக் கொண்ட சொகுசு காரையே இந்திய ஜோசியக்காரர் தற்போது வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். குறிப்பாக கிளி ஜோசியக்காரர்களை இவர் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றார்.

இவரின் கார் கொள்முதல் பொதுமக்களை ஆச்சரியத்தில் மட்டுமில்லைங்க வியப்பிலும் ஆழ்த்தி இருக்கின்றது. "ஜோசியம் பார்த்தே இவ்ளோ ரூபா மதிப்புள்ள காரை அவர் வாங்கிட்டாரா" என்பதே பலரின் ஆச்சரியமாக இருக்கின்றது. அதேவேளையில், இந்த காரை அவர் வாங்கியதற்கான சுவாரஷ்யமான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

முன்னதாக அவர் ஹூண்டாய் 10 காரையே பயன்படுத்தி வந்திருக்கின்றார். அப்படியாக ஒரு நாள் இந்த காரில் அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென பழுதடைந்து நின்றிருக்கின்றது. இந்த நிலையிலேயே காரை விட்டு வெளியே நடந்துச் சென்ற புனீத் குப்தா, அருகில் லேண்ட் ரோவர் கார் விற்பனையகம் இருப்பதைப் பார்த்து இருக்கின்றார்.

உள்ளே நுழைந்த அவர் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் எவோக் காரை வாங்கி இருக்கின்றார். இவரின் எளிமையான தோற்றத்தைப் பார்த்த ஷோரூம் பணியாளர்கள், அவர் ஏதோ பொழுதுபோக்கிற்காக வந்த நபர் என நினைத்துக் கொண்டு பேசியதாக ஆஸ்ட்ரோ டால்க் உரிமையாளர் புனீத் பகிர்ந்துக் கொண்டார்.

ஆனால், நெட் பேமெண்ட் கொடுத்து அவர் அந்த காரை வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்திருக்கின்றார். இந்த காரை வாங்கிய பின்னர் தனக்கான மதிப்பு மக்கள் மத்தியில் கூடிவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். அதேவேளையில், ஒரு காருக்காக இவ்ளோ தொகையை நாம் செலவு செய்ய வேண்டுமா என்றும் தான் வருந்தியதாக புனீத் கூறி இருக்கின்றார்.

முன்னதாக, அவர் ஹூண்டாய் கிரெட்டாவை வாங்கும் பிளானில் இருந்திருக்கின்றார். ஆனால், அதற்கு இந்தியாவில் அதிகம் காத்திருப்பு காலம் என்பதனாலேயே ஹூண்டாய் ஐ10 காரை அவர் வாங்கி வந்திருக்கின்றார். இதேபோல், லேண்ட் ரோவரின் மற்ற தயாரிப்புகளுக்கும் காத்திருப்பு காலம் என்பதாலேயே அவர் தற்போது உடனடியாக கிடைக்கும் மாடலான ரேஞ்ச் ரோவர் எவோக்கை வாங்கி இருக்கின்றார்.

இந்த காரில் சொகுசு வசதிகள் மற்றும் பிரீமியம் தர தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் 10 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக இட வசதி, 3டி தொழில்நுட்பம் கொண்ட 360 டிகிரி கேமிரா, பிஎம்2.5 ஃபில்டர் வசதிக் கொண்ட காற்று வடிகட்டி மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற ஏகப்பட்ட வசதிகள் இந்த சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரில் ஆடம்பர அம்சங்கள் அதிகம் என்பதாலேயே இந்திய தொழிலதிபர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இந்திய திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த காருக்கு மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரையே ஆஸ்ட்ரோடால்க் நிறுவனர் வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 13, 2023, 5:00 [IST]
English summary
Astrotalk founder bought range rover evoque luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+