என்னது இந்த மேம்பாலத்துல பயணிக்க டோல் கட்டணம் 250ரூபாவா! கடலுக்கு மேல ரொம்ப நேரம் பயணிக்கிற அனுபவம் கிடைக்கும்

பொறந்து என்னத்தங்க சாதிச்சுட்டோம், குறைந்த பட்சம் டிராவலை பண்ணியாச்சும் பொறந்ததுக்கான பலனைப் பெற்றுவிடுவோம்னு இப்பலாம் நிறைய பேரு டிராவல் பண்ண கிளம்பிட்டாங்க. இதனாலதான் இப்பலாம் சிம்லா, லடாக் போன்ற இடங்களில் டூரிஸ்ட்கள் குவிந்துக் காணப்படுகின்றனர். இங்கு மட்டுமில்லைங்க, உலக அதிசயமாகப் பார்க்கப்படுபவற்றைக் காணப் புறப்படுபவர்களும் இங்கு ஏராளம்.

அந்தவகையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள அடல் டனல் (Atal Tunel) சுரங்கப் பாதையைப் பார்க்கவும், அதில் பயணிக்க புறப்படுவர்களின் எண்ணிக்கையும் தற்போது மிகப் பெரிய உயர்ந்து உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் மிகவும் நீளமான கடல் வழி மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mumbai trans harbour link

இந்த மேம்பாலத்தில் பயணிக்கச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட இருக்கின்றது. குறிப்பாக எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறப்புகள் என்ன? என்பது போன்ற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஒட்டுமொத்த மஹாராஷ்டிராவின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக, மிக முக்கியமாக மும்பை நகரத்தின் எதிர்பார்ப்பாக அடல் சேது பாலம் இருக்கின்றது. அடல் சேது என்று அறியப்படும் இந்த மேம்பாலத்திற்கு மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் என்கிற மற்றுமொரு பெயரும் உண்டு. இந்த பாலமே வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

Mumbai trans harbour link sea bridge

இந்த பாலத்தில் பயணிக்க டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையிலுக்கு காருக்கு ரூ. 250 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆரம்பத்தில் கார்களுக்கு 500 ரூபாயே கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஜப்பான் சர்வதேச கோ-ஆப்ரேஷன் ஏஜென்சி (Japan International Cooperation Agency)-யின் அளவீட்டைக் கணக்கிட்டு இவ்வளவு பெரிய தொகை வசூலிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இதனை தற்போது அர்பன் டெவலப்மெண்ட் டிபார்ட்மென்ட் (UDD) ரூ. 250ஆக நிர்ணயம் செய்திருக்கின்றது. முதல் 30 ஆண்டுகளுக்கு டோல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டு தொடங்கி 2053 ஆம் ஆண்டு வரையில் டோல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது.

Sea bridge

போக்குவரத்தைப் பொருத்து இந்த கட்டணம் ஏற்றம் செய்யப்படுதல் அல்லது குறைக்கச் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுதவிர, ஆறாண்டுகளுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் 6 சதவீதம் வரை அதிகரிக்க மஹாராஷ்டிரா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும், மேலே குறிப்பிடப்பட்ட கட்டணமானது காருக்கு மட்டுமானதாகும்.

பிற வாகனங்களுக்கு வெவ்வேறு வகையில் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது. உதாரணமாக மினி பேருந்திற்கு ரூ. 560-ம், 2 ஆக்சில் டிரக்குகளுக்கு ரூ. 1,180ம், 3 ஆக்ஸில் டிரக்குகளுக்கு 1,290 ரூபாவும் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. இதேபோல், 4 முதல் 6 ஆக்ஸில்கள் கொண்ட வாகனங்களுக்கு 1,850 ரூபாவும் மற்ற கனரக வாகனங்களுக்கு ரூ. 2,250 டோல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது.

உலகின் நீளமான கடல் மேம்பாலங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 17 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதே இந்த மேம்பாலம் ஆகும். இதன் நீளம் 21.8 கிமீ ஆகும். மும்பையின் செவ்ரி தொடங்கி நவி மும்பையில் உளஅள சிர்லே வரையில் நீண்டிருக்கும்.

கடல் மேற்பரப்பிலேயே பயணிக்கும் வண்ணம் இந்த மேம்பாலம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் எனில் 16 நிமிஷம் வரை நேரம் மிச்சமாகும். இப்போதைய நிலவரப்படி செவ்ரி மற்றும் சிர்லே வரையிலான டிராவல் டிஸ்டன் 30 கிமீட்டராக இருக்கின்றது. இதில், இருந்து 8.2 கிமீ வரை இப்போது டிராவல் டிஸ்டன்ஸ் குறைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் மிக நீளமான கடல் மேம்பாலமாக அடல் சேது காட்சியளிக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்கள் அல்லது ஓரிரு வாரங்களுக்கு இது பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், இதில் வசூலிக்கப்பட இருக்கும் கட்டணம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 5:00 [IST]
English summary
Atal setu toll fee charges details starts from rs 250
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X