ரூ10 சில்லறையாக கொடுத்து லட்ச ரூபாய் ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் புதிதாக ஏத்தர் 450 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி உள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் இந்த ஸ்கூட்டருக்கான முழு பணத்தையும் பத்து ரூபாய் நாணயங்களாக வழங்கியுள்ளார். இந்த தகவலை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தாருண் மேதாவே பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வெகுவாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் நிலையில் ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து அதிக விற்பனையை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ather 450 10 rupees coin

இந்நிலையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிதாக ஒரு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவில் அவர் ஜெய்ப்பூரை சேர்ந்த புதிய வாடிக்கையாளர் ஒருவர் தனக்காக ஏத்தர் 450 ஸ்கூட்டரை ரூபாய் பத்து நாணயங்களாக கொடுத்து வாங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ட்வீடில் இது குறித்த புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இப்படியாக ரூபாய் 10 நாணயமாக கொடுத்து வாங்கிய நபர் யார் என்ற தகவலை அவர் இதுவரை வெளியிடவில்லை. மேலும் அவர் என்ன காரணத்திற்காக இப்படி ரூபாய் பத்து நாணயங்களை கொடுத்து ஸ்கூட்டரை வாங்கினார் என்ற தகவலும் நமக்கு தெரியவில்லை. இருந்தாலும் இப்படியாக 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து ஸ்கூட்டர் வாங்குவது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றுதான்.

இவர் எந்த ஸ்கூட்டரை வாங்கி உள்ளார் என்ற தகவலும் தெரியவில்லை. இந்த 450 ஸ்கூட்டரை பொறுத்தவரை தற்போது மூன்று விதமான மாடல்களில் விற்பனையாகிறது. 450 எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் ஆகிய மூன்று ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகி வருகிறது. இதில் ஏக்கர் 450எஸ் ஸ்கூட்டரை பொறுத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 1.10 லட்சம் முதல் ஏத்தர் 450 அபெக்ஸ் ஸ்கூட்டர் ரூபாய் 1.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

இதில் அவர் எந்த ஸ்கூட்டரை வாங்கியிருந்தாலும் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் ரூபாய் 10 நாணயமாக கொடுத்திருக்க வேண்டும். இது போன்று அவ்வப்போது சில வாடிக்கையாளர்கள் வித்தியாசமாக வாகனங்களை வாங்குவதை நம்மால் காண முடிகிறது பலர் இதுபோன்ற சில்லறைகளாக பணத்தை கொடுத்து வாகனத்தை வாங்கி பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணம் இருக்கிறது.

ஏத்தர் நிறுவனம் தனது புதிய ரிட்ஸ்ஷா என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது. இதற்கான டீசரை நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில் இந்த ஸ்கூட்டரின் வருகைக்காக தற்போது அதன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஏத்தர் 450 சீரிஸ் ஸ்கூட்டர்கள் எல்லாம் பெர்ஃபார்மன்ஸ் ஸ்கூட்டர்களாக இருக்கிறது.

ஆனால் ஏற்ற ரிட்ஸ்ஷா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று வித்தியாசமான அப்ரோச்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பங்களுக்கு தேவையான ஸ்கூட்டராக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம். சொகுசு வசதி மற்றும் பிராக்டிகாலிட்டி அம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டராக இது வடிவமைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டிலேயே மிகப்பெரிய சீட்டு கொண்ட ஸ்கூட்டராக இதுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் ஸ்கூட்டர்களிலேயே பெரிய ஸ்கூட்டராக இது இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏத்தர் ஸ்கூட்டரில் 450 ஸ்கூட்டர் விட அதிக ரேஞ்ச் தரும் வகையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டரி, மோட்டாரர்களும் அப்டேட் செய்யப்பட்டு வெளியாகும் என தெரிகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் ஸ்கூட்டரை நாணயமாக கொடுத்து வாடிக்கையாளர் வாங்கியது தற்போது பலது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இவர் எதற்காக வாங்கினார் என்ற முழுமையான காரணங்கள் தெரியவில்லை. பெரும்பாலும் இப்படியாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் சேமிப்பில் இருந்து வாகனத்தை வாங்கி இருப்பார்கள். இந்த காரணத்தையும் வெளியிட்டால் தற்போது வாகனம் வாங்க பணம் சேமிக்கும் பலருக்கும் இது ஒரு பெரும் ஊக்கமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 7:19 [IST]
English summary
Ather 450 jaipur man buys electric scooter rs 10 coins ceo reacts
மேலும்... #ஏத்தர் #ather
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+