ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதுசா பேட்டரி பேக்க மாத்தணும்னா எவ்வளவு செலவாகும்? லட்சத்தையே தொட்ருச்சு!
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. சொல்லப் போனால் பலர் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மாதிரியான சூழலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒன்றில் பழுதான பேட்டரி பேக்கை மாற்ற எவ்வளவு செலவாகும் என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது.
மின்சார இருசக்கர வாகன உரிமையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் வாயிலாகவே அந்த அதிர்ச்சியளிக்கும் அல்லது திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது, உத்தரவாதம் இல்லாத பேட்டரி பேக் பழுதடைந்தால் அதை மாற்ற ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவாகும் என்கிற பேரதிர்ச்சி அளிக்கும் தகவலே வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சார வாகனங்களின் இதயம் என்று அதன் பேட்டரி பேக்கை கூறலாம். இந்த பேட்டரி பேக்குகள் காலப் போக்கில், அதன் செயல் திறனை இழக்க நேரிடும். இதனை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், ஓர் புதிய வாகனத்திற்கு இணையான விலையை அவைக் கொண்டிருக்கும்.
இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவமே தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றே ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X). புதிதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நாம் செலவழிக்க வேண்டி இருக்கும்.
இத்தகைய மாபெரும் விலையைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பேக்கே முழுமையாக பழுதடைந்திருக்கின்றது. இதனை மாற்றியதற்கே பெரும் தொகை செலவாகி இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்து இருக்கின்றார். மேலும், அவர் ஷோரூம் ஊழியரிடம் எழுப்பிய கேள்வியின் வாயிலாக சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதாவது, புதிய ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இணையான தொகையையே பேட்டரி பேக்கை மாற்றுவதற்கு செலவாகும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த பேட்டரி பேக் வாரண்டி திட்டத்தின்கீழ் வரவில்லை என்றால் 94 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகும் என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவலே தெரிய வந்திருக்கின்றது.
ஆனால், இதனை சில நூறு ரூபாய் செலவிலேயே 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர் மாற்றி இருக்கின்றார். பேட்டரி பேக் பழுது சிக்கலைச் சந்தித்து இருக்கும் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, வெறும் 1.5 வயதே ஆன வாகனம் என கூறப்படுகின்றது.
இத்தகைய குறைந்த வயதுக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பேக்கே முழுமையாக செயலிழந்து போயிருக்கின்றது. இதற்கு உத்தரவாதம் பொருந்தும். இதன் காரணத்தினாலேயே பெரிய அளவில் செலவின்றி அவரால் புதிய பேட்டரி பேக்கை பெற முடிந்திருக்கின்றது. இருப்பினும், அவருக்கு சில சந்தேகங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, பேட்டரி பேக் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நான் எப்படி நம்புவது அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
அதற்கு ஷோரூம் ஊழியர்கள் சில ஆதாரங்களை வழங்கினர். அதில் ஒன்று பேட்டரிக்கான பில் ஆகும். அந்த பில்லில் பேட்டரியை மாற்றுவதற்கு ரூ. 49 ஆயிரம் செலவானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரிக்கான தொகை ரூ. 48 ஆயிரம் என்றும் சேவை செலவு ரூ. 1,000 என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே பேட்டரி பேக்கை உத்தரவாதம் இல்லாத நிலையில் மாற்றி இருந்தால் எவ்வளவு செலவாகும் என்றும் அவர் கேட்டிருந்தார். அதற்கு ஷோரூம் அளித்த தகவலின்படி, ஜென்2 பேட்டரி என்றால் ரூ. 84,500ம், ஜென்3 பேட்டரி என்றால் 94,500 செலவாகும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
நல்ல வேளையாக, இந்த மாபெரும் செலவில் இருந்து ஏத்தர் 450எக்ஸ் உரிமையாளர் தப்பி இருக்கின்றார். அவர் ரூ. 274 மட்டுமே செலவு செய்ததாகக் கூறப்படுகின்றது. அதேவேளையில், பேட்டரி பேக் மாற்றப்பட்டு உரிமையாளர் வசம் அந்த வாகனம் வர சுமார் 45 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதுவே தான் சந்தித்த மிகப் பெரிய சிக்கல் என அதன் உரிமையாளர் தெரிவித்து இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இவற்றில் பேட்டரி பழுதானால், அதனை தூக்கிப் போட்டுவிட்டு புதிய வாகனம்தான் வாங்க வேண்டும் என்பது போன்ற சூழலே தற்போது இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. இது மின்சார வாகனங்களின் விற்பனைக்கு பெரும் தடைக் கல்லாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








