லாபமே வேண்டாம், வித்தா போதும்னு இருக்காங்களா! தலைய காப்பாத்தும்னு பாத்தா பலோரட பாக்கெட்டையும் காப்பாத்திருக்கு
பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனெர்ஜி (Ather Energy), சமீபத்தில் ஹாலோ (Halo) எனும் ஹெல்மெட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் ஸ்மார்ட் ஹெல்மெட் ஆகும். இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு தருவதில் தலைக்கவசங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஓர் அம்சத்தையே நவீனமானதாகவும், அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களையும் தாங்கியதாகவும் தயார் செய்திருக்கின்றது, ஏத்தர் எனெர்ஜி. இந்த ஹெல்மெட்டின் உருவாக்கத்தின் வாயிலாக, தாங்கள் ஓர் சிறந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியாளர் மட்டுமல்ல, சிறந்த ரைடிங் கியர்களை தயாரிக்கும் நிறுவனம் என்றும் அது வெளிக்காட்டியது.
மேலும், இன்று அந்த ஹெல்மெட்டை புக் செய்தவர்களுக்கே ஆச்சரியத்தை தரும் விதமான ஓர் தகவலையும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. அது, ஹாலோ ஹெல்மெட்டின் விலையில் பெரும் தள்ளுபடியைச் செய்திருக்கின்றது. ரூ. 3 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது.

ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் முழு முகம் மற்றும் அரை முகம் என இரண்டு வெர்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், அறிமுகம் செய்யப்பட்டபோது ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் இந்த ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட்டின் முழு முக வெர்ஷனுக்கு ரூ. 12,999 என்கிற விலையை நிர்ணயம் செய்தது.
தொடர்ந்து, அரை முக ஹெல்மெட்டிற்கு ரூ. 4,999 விலையும் அது நிர்ணயம் செய்தது. மேலும், இந்த ஹெல்மெட்டுகளுக்கான புக்கிங் பணிகளையும் தொடங்கியது. அப்போது, புக் செய்தவர்களுக்கே ரூ. 3 ஆயிரம் குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ஏத்தர் நிறுவனம் தன்னுடைய ஏத்தர் கம்யூனிட்டி நிகழ்வின் வாயிலாகவே இந்த ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அரங்கேறியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது ஹெல்மெட்டை டெலிவரி செய்வதற்கான பணியில் ஏத்தர் எனெர்ஜி மிக தீவிரமாகக் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே இதன் உற்பத்தி பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு உள்ளன.
ஏத்தர் எனெர்ஜி தயார் செய்திருக்கும் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களை தாங்கியது மட்டுமல்ல, அதிக பாதுகாப்பு திறன்மிக்கதும் என தெரிய வந்திருக்கின்றது. இதற்கேற்ப தங்களின் ஹெல்மெட் ஐஎஸ்ஐ (ISI) மற்றும் டிஓடி (DOT) ஆகிய முக்கிய சான்றுகளைப் பெற்றிருப்பதாக ஏத்தர் எனெர்ஜி தெரிவித்து இருக்கின்றது.
இந்த ஹெல்மெட்டிற்குள் இரண்டு ஸ்பீக்கர்களை ஏத்தர் எனெர்ஜி வழங்கி இருக்கும். ஹர்மேன் கர்டோன் ஸ்பீக்கர்களே அவை ஆகும். இது ஓர் மைக்ரோஃபோன் வசதிக் கொண்ட ஸ்பீக்கர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மியூசிக் கேட்பது மற்றும் செல்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதிலளிப்பது உள்ளிட்டவற்றை இதன் வாயிலாக செய்துக் கொள்ள முடியும்.
மேலும், ஹெல்மெட்டை ஸ்கூட்டருடன் இணைக்கும் பொருட்டு ப்ளூடூத் இணைப்பு வசதியும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், நேவிகேஷன் போட்டு அவ்வாகனத்தில் பயணிக்கும்போது வலது-இடது திரும்ப வேண்டும் என்பதை இந்த ஸ்பீக்கர்கள் வாயிலாகவே தெரிந்துக் கொள்ள முடியும். இதை ஒயர்லெஸ் வாயிலாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக, ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜுக்கு உள்ளே வைக்கும் போதே சார்ஜாகிக் கொள்ளும் வசதி அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் ஒரு வாரம் வரை அதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஸ்கூட்டருடன் சேர்த்து ஹெல்மெட் வாயிலாகவும் இந்தியர்களை வளைத்துப் போடும் பொருட்டு அட்டகாசமான ஹாலோ தலைக்கவசத்தை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








