தொப்பி போட்டு சுத்துற மாதிரி எல்லாரும் இந்த ஹெல்மெட்ட போட்டு சுத்த போறாங்க! ஹாலோ உற்பத்தியை தொடங்கிட்டாங்களா!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனெர்ஜி (Ather Energy), எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களைத் தொடர்ந்து தலைக்கவசம் (Helmet)-களை உற்பத்தி செய்யும் பணியையும் கையில் எடுத்திருக்கின்றது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் முக்கிய பங்கினை வகிக்கக் கூடியதாக ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. இந்த அம்சத்தையே அதிநவீன வசதிகள் கொண்டதாகவும், அதிக பாதுகாப்புமிக்கதாகவும் ஏத்தர் எனெர்ஜி தன்னுடைய கை வண்ணத்தில் தயார் செய்திருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ரிஸ்தா (Rizta)-வை தன்னுடைய கம்யூனிட்டி நாளன்று அந்நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் டெலிவரி பணிகள்கூட சமீபத்திலேயே இந்தியாவில் தொடங்கின. இது ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

Ather halo enters early production

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்த அந்த நாளிலேயே ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் ஓர் சர்ப்ரைஸ் அறிமுகமாக அதன் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிக் கொண்ட தலைக்கவசத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தது. ஹாலோ (Halo) எனும் பெயரிலேயே அதை நிறுவனம் அறிமுகம் செய்தது.

இது ஓர் ஸ்மார்ட் ஹெல்மெட் ஆகும். ஸ்பீக்கர், ப்ளூடூத் இணைப்பு வசதி என ஏகப்பட்ட சிறப்புகளைத் தாங்கிய ஹெல்மெட்டே ஹாலோ ஆகும். இந்த ஹெல்மெட்டை தயாரிக்கும் பணிகளையே ஏத்தர் எனெர்ஜி தற்போது தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பதிவையே நிறுவனத்தின் சிஇஓ-வான தருண் மேத்தா தற்போது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

அவர் பகிர்ந்திருக்கும் பதிவில் ஓர் வீடியோவும் இடம் பெற்றிருக்கின்றது. இந்த வீடியோவின் வாயிலாக ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் ஆரம்ப உற்பத்தியில் நுழைந்திருப்பது உறுதியாக உள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டு இருப்பது சேம்பிள் மாடல்கள்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் தனித்துவமான அம்சங்களையே தருண் மேத்தா ஆய்வு செய்து பார்த்திருக்கின்றார்.

இதுகுறித்த காட்சிகளும் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கின்றன. ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஹர்மேன் கர்டோன் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்களையும் இந்த ஹெல்மெட் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஹெல்மெட்டின் சேம்பிள் மாடலையே தற்போது ஏத்தர் உற்பத்தி செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் வெகு விரைவில் ஹெல்மெட்டை பரந்த நிலையில் உற்பத்தி செய்ய தொடங்கிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Ather halo

எனவே சீக்கிரமே இந்த ஹெல்மெட் விற்பனைக்கு வந்துவிடும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த ஹெல்மெட் ரூ. 12,999 விலையில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இந்த விலையிலேயே தனித்துவமான ஒயர்லெஸ் சார்ஜரும் வழங்கப்பட இருக்கின்றது. இதை ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பூட் ஸ்பேஸிலேயே வைத்து இன்ஸ்டால் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கேற்ப அதன் பூட் ஸ்பேஸ் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. முழு முக ஹெல்மெட் மட்டுமல்ல அரைமுக ஹெல்மெட்டையும் அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதற்கு ரூ. 4,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஐஎஸ்ஐ (ISI) மற்றும் டாட் (DoT) இரண்டு சான்றையும் பெற்ற ஓர் ஹெல்மெட்டே இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே அதிக பாதுகாப்பை இந்த ஹெல்மெட் வழங்கும் என தெரிகின்றது. மேலும், இந்த ஹெல்மெட்டுகள் பாதுகாப்பானதாக மட்டுமே இருக்கப் போவதில்லை, அதிநவீன பயன்பாட்டு அனுபவத்தையும் அது வழங்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த ஹெல்மெட்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் வாரக் கணக்கில் மீண்டும் சார்ஜ் செய்யாமலே பயன்படுத்த முடியும் என ஏத்தர் தெரிவித்து இருக்கின்றது.

இதில், இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பீக்கர் வாயிலாக பாடலை கேட்க முடியும். அத்துடன், செல்போனை இணைத்து அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியும். அனைத்தையும் பயணித்துக் கொண்டே செய்யலாம். இந்த ஹெல்மெட்டில் கூடுதல் சிறப்பு வசதியாக தானாகவே ஆன் ஆகும் வசதி மற்றும் செல்போனுடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரைடர் ஹாலோ ஹெல்மெட்டை தலையில் அணிந்தாலே போதும் அது தானாகவே அடுத்தடுத்த வேலைகளை செய்துவிடும் என ஏத்தர் தெரிவித்து இருக்கின்றது. இதற்காக வியர் டிடெக் தொழில்நுட்பம் (WearDetect technology) வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சமே ரைடர் தலைக்கவசம் அணிவதைக் கண்டறிந்து அதை ஆன் செய்வது தொடங்கி செல்போனுடன் இணைக்கும் வேலைகளை பார்க்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2024, 10:27 [IST]
English summary
Ather energys halo smart helmet commences early production
மேலும்... #ather energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+