அடடா, அற்புதம்... ஆழ்கடல் சுற்றுலாவை வழங்கும் நீர்மூழ்கி கப்பல்!

Written By:

அட்லான்டிஸ் நீர்மூழ்கி கப்பலின் சேவை துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதத்தில், ஒரு இலவச பயணத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் ஆழ்கடலை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை இந்த நீர்மூழ்கி சுற்றுலாக் கப்பல் வழங்கி வருகிறது. இந்த கப்பல் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

நீர்மூழ்கி கப்பல் விபரம்

நீர்மூழ்கி கப்பல் விபரம்

அட்லான்டிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நீர்மூழ்கி கப்பல், 1990ம் ஆண்டு அக்டோபர் 15ந் தேதி தனது முதல் பயணத்தை துவங்கியது. தற்போது 25வது ஆண்டு நிறைவை கொண்டாடி வருகிறது.

ஆழ்கடல் அனுபவம்

ஆழ்கடல் அனுபவம்

130 அடி ஆழத்தில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக பார்க்கும் அனுபவத்தை தருவதோடு, கடலில் மூழ்கிய இரண்டு கப்பல்களையும் காணும் வாய்ப்பை இந்த நீர்மூழ்கி கப்பல் தருகிறது.

பயணம்

பயணம்

தெற்கு கரீபிய கடற்பகுதியில் உள்ள அருபா தீவின் ஆரஞ்ச் நகரத்திலுள்ள சாகச மையத்திலிருந்து சிறிய படகு மூலம் இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்பட்டு பின்னர், நீர்மூழ்கி கப்பலில் தங்களது பயணத்தை தொடர்கின்றனர்.

 கல்வி சுற்றுலா

கல்வி சுற்றுலா

கல்விச் சுற்றுலா, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என பல்வேறு தரப்பினருக்கம் இந்த நீர்மூழ்கி கப்பலின் சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

சொகுசு வசதி

சொகுசு வசதி

சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில், இருக்கைகள், குளிர்சாதன வசதி, பெரிய கண்ணாடி ஜன்னல்களை இந்த நீர்மூழ்கி கப்பல் கொண்டுள்ளது.

 அனுமதிபெற்ற கப்பல்

அனுமதிபெற்ற கப்பல்

இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு அமெரிக்க கடலோர காவல்படை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலவச பயணம்

இலவச பயணம்

இந்த கப்பல் சேவைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், 10 லட்சமாவது வாடிக்கையாளருக்கு இலவச பயணத்தை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு உடனடியாக முன்பதிவு செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெறுவருக்கு 2 பேர் செல்வதற்கான பயண டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். டிசம்பர் 31ந் தேதிக்கு முன்னதாக வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Atlantis Submarines Aruba expects its 1 millionth passenger this year and you might be the one! Book your ticket now, find out upon check-in for the tour if you are #1000000 and as our 1 millionth passenger we will treat you to a free trip back to Aruba.
Story first published: Monday, July 13, 2015, 11:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark