100 கிலோ எடை... டேக் ஆஃப் செய்யும்போது கழண்டு விழுந்த விமானத்தின் டயர்... பகீர் கிளப்பும் வைரல் வீடியோ!
விமானம் டேக் ஆஃப் ஆகும் போது டயர் கழண்டு விழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு விமானிக்கு விமானத்தை இயக்குவதில் இருக்கும் சேலஞ்சிங்கான விஷயமே டேக் ஆஃப் செய்வதும், லேண்ட் செய்வதும் தான். இந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் விமானம் பெரும் விபத்தில் சிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. ஒரு விமானி விமானத்தை டேக் ஆஃப் அல்லது லேண்டிங் செய்யும் போது என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என பெரும் பட்டியலே இருக்கிறது. விமானிகளும் இந்த நேரத்தில் மிகக் கவனமாக இருப்பார்கள்.

இப்படியாக ஒரு விமானம் டேக் ஆஃப் ஆகும் போது விமானத்தின் ஒரு டயர் மட்டும் விமானத்திலிருந்த கழண்டு விழுந்துவிட்டால் என்ன ஆகும்? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் இத்தாலியில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அட்லஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த 11ம் தேதி இத்தாலி நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டது. விமானம் டரென்டோ விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆகியது.

இந்த விமானம் டேக் ஆஃப் ஆன போது விமானத்தில் உள்ள டயர்களில் ஒரு டயர் மட்டும் கழண்டு தரையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ தனது செல்போனில் வீடியோ எடுக்க,அந்த வீடியோ பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஏரோஇன் என்ற ஒரு ட்விட்டர்பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில் உள்ள விமானம் போயீங் 747-400 ட்ரீம் லிஃப்டர் விமானம் ஆகும். இந்த விமானம் டேக் ஆஃப் ஆக வரும் போது சரியாக விமானம் தரையிலிருந்து மேலே பறக்கத் துவங்கியதும் விமானத்தின் டயர் ஒன்று தீபிடித்து புகையுடன் கீழே விழுந்தது பதிவாகியிருந்தது. இதை கண்டதும் எல்லாரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பலர் இந்த விமானத்திற்கு என்ன ஆனது எனச் சமூகவலைத்தளங்களில் கேள்வியை எழுப்பி வருகிறது. பார்க்கவே பகீர் என இருக்கும் இந்த வீடியோ குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ட்ரீம்லிஃப்டர் விமானம் 18 வீல்களை கொண்டது. ஒவ்வொரு வீலும் 4 அடி டயாமீட்டர் அளவு கொண்டது. இந்த வீலின் எடை மட்டும் 100 கிலோ விற்கு மேல் இருக்கும். இந்த விமானம் போயீங் 747 ரக விமானத்திலிருந்து கண்வெர்ட் செய்யப்பட்ட ட்ரீம்லிஃப்ட்ர் விமானமாகும். இது தற்போது சரக்கு ஏற்றிச்செல்லும் விமானமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரலாகன நிலையில் இந்த விமானத்திற்கு என்ன ஆனது எனப் பலர் பதற்றத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பொதுவாக இப்படியாக விமானத்தை டேக் ஆஃப் செய்யும் இப்படியாக டயர் கழண்டு விழுந்துவிட்டால் என்ன நடக்கும் எனப் பார்க்கலாம். விமானம் டேக் ஆப் ஆகும்போது விமானத்தின் டயர் கழண்டு விழுந்தது. இது குறித்து விமானிக்குத் தகவல் தெரியவரும். விமானத்தில் உள்ள கருவிகள் இந்த தகவலை விமானிக்குத் தெரியப்படுத்தும். உடனடியாக இது குறித்து விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும்.

அடுத்ததாக மேலே டேக் ஆஃப் ஆகிய விமானம் தொடர்ந்து பறக்க அனுமதிக்கப்படும். அதற்குள் அந்த விமானத்தின் எந்த டயர் கீழே விழுந்தது. எனப் பார்க்கப்படும், பின்னர் மற்ற டயர்களின் நிலை குறித்து விமானியிடம் கேட்கப்பட்டும், விமானி மற்ற டயர்களின் நிலைகளை கூறிய பின்னர் விமான கட்டுப்பாட்டு மையத்திடம் விமானம் குறித்து உள்ள தகவல்களை எடுத்து இந்த விமானத்தில் குறிப்பிட்ட டயர் இல்லாமல் லேண்ட் செய்ய முடியுமா எனச் சோதனை செய்வார்கள்.

அப்படி குறிப்பிட்ட டயர் இல்லாவிட்டால் பிரச்சனையில்லாமல் லேண்ட் செய்யலாம் என இருந்தால் உடனடியாக யோசிக்காமல் விமானத்தைப் பறக்க அனுமதியளித்துவிடுவார்கள். மேலும் இது குறித்து இந்த விமானம் அடுத்தாக தரையிறங்கவுள்ள விமான நிலையத்திற்கும் தகவல் பறக்கும்.

அங்கு இந்த விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படும். விமானம் குறிப்பிட்ட விமான நிலையத்தை எட்டியதும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கத் தேவையான வழிமுறைகளையும், உதவிகளையும் விமான கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு வழங்குவார்கள்.

ஒருவேளை குறிப்பிட்ட விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலையில் விமானத்தின் டயர் கழண்டுவிட்டால் உடனடியாக எமர்ஜென்ஸி அறிவிக்கப்படும். இந்த எமர்ஜென்ஸி, பின்னர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க அல்லது குறைந்த சேதாரத்துடன் தரையிறக்கவுள்ள வழிகளை ஆய்வு செய்யப்படும். பயணிகள் விமானமாக இருந்தால் நிலைமை குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்படும். பின்னர் பத்திரமாகத் தரையிறக்க உள்ள வழிமுறைகள் பின்பற்றப்படும்.

தற்போது வைரலான இந்த சம்பவத்தைப் பொருத்தவரை இந்த விமானம் 18 டயர்கள் கொண்டது என்பதால் அதில் ஒரு டயர் இல்லையென்றாலும் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கிவிடலாம் என்பதால் விமானம் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை நோக்கி பறந்தது. அங்கு விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும் இத்தாலியில் கீழே விழுந்த விமானத்தின் டயர் அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த டயர் எப்படி கழண்டது என்பது குறித்து விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விமானம் டேக் ஆஃப் ஆகும் போது கழண்டு விழும் சம்பவம் சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








