100 கிமீ வேகத்தில் வந்த கார்! குறுக்கே இருந்த கெளசிக்! ரூ10 லட்சம் மொத்தமா போச்சு!

தினந்தோறும் சாலையில் விபத்துகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. முக்கியமாக கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணமாக இரகு்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சில விபத்துகளுக்கு ஓட்டுநர்கள் மட்டும் காரணமல்ல அதிகாரிகளின் தவறு மற்றும் கவனக்குறையும் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிகாரிகளின் இந்த தவறுக்கு மக்கள் தான் நஷ்டப்படுகிறார்கள். இப்படியாக அதிகாரிகள் செய்த தவறுக்கு ஆடி ஏ4 கார் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

பிராடிக் சிங் என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காரில் ஆடி ஏ4 கார் விபத்தில் சிக்கிய காட்சி நிகழ்ந்துள்ளது. இந்த கார் உ.பி மாநிலத்தில் உள்ள பைரேலி என்ற பகுதியில் ஒரு சிங்கிள் சாலையில் இந்த கார் பயணித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது காரில் இருந்த டேஷ் போர்டில் பதிவான காட்சிகள் தான் இவை.

Audi A4 Crash

இந்த காரின் உரிமையாளர் காரை இரவு நேரத்தில் குறுகிய சாலையில் ஓட்டி சென்றுள்ளது. அப்பொழுது அந்த சாலையில் சாலையில் உள்ள எச்சரிக்கை பலகையோ அல்லது தெரு லைட்டுகளோ இல்லை. இதனால் சுற்றுவட்டார பகுதி எப்படி இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. சாலையீல் ஆளில்லமல் இருக்கிறது. டிரைவர் காரை சுமார் 70 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். சுமார் 100 கி.மீ வேகத்திற்கு காரின் வேகம் உயர்த்தப்பட்டது.

எதிரில் வருபவர்களுக்கு கண் கூச்சம் இருக்க கூடாது என்பதற்காக இந்த காரில் லோ பீம் போடப்பட்டிருந்தது. இப்படியாக இந்த கார் ஒரு பைக்கை முந்தி செல்லும் போது திடீரென எதிர்பாராத விதமான முன்னே இருந்த தடையின் மீது மோதியது. சாலையின் குறுக்கே இந்த தடை குறித்து எந்த விதமான எச்சரிக்கை பலகையும் கிடையாது. அதே நேரம் அங்கே வெளிச்சத்திற்காக லைட்டும் கிடையாது. இது போக தடையின் மீது ரிஃப்ளெக்டர்ளோ அல்லது எச்சரிக்கை பலகையோ அல்லது பேரிகாடோ கிடையாது.

Audi A4 Crash

இதனால் எதிர்பாராத விதமான இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் காரின் முகப்பு பகுதி பெரிய அளவில் சேதமடைந்தது. இந்த சாலைக்கான வேகத்தை விட அதிக வேகத்தில் கார் வந்ததால் விபத்தில் சேதம் அதிகமாக இருந்தது. இந்த விபத்திற்கு பிறகு காரை சர்வீஸ் சென்டருக்கு அதன் உரிமையாளர் எடுத்து சென்றார்.

இந்த காருக்கு இன்சூரன்ஸ் இருந்ததால் காருக்கான ரிப்பேர் செலவுகள் இன்சூரன்ஸ் சூலம் செய்யப்படுத்தும். இந்த காரை சரி செய்ய ரூ9.5 லட்சம் செலவாகும் என எஸ்டிமேட் வழங்கியுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த கிளைமை வழங்க மறுத்துவிட்டது. இதற்கு முக்கியமான கார் அதிக வேகத்தில் வந்தது தான் விபத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

Audi A4 Crash

கிளைம் நிராகரிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் எதுவும் தெரியவில்லை.3 மாதங்களுக்கு சர்வீஸ் சென்டரில் தான் இந்த இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில் காரில் உள்ள சில பாகங்கள் வேறு காணாமல் போயுள்ளது. இதற்கு சர்வீஸ் சென்டரும் பொறுப்பேற்க்கவில்லை. இவ்வளவு பெரிய தொகையை தற்போது இவர் தான் தன் கையில் இருந்து செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவர் சற்று கவனமாக இருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும். அதே நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாதது அதிகாரிகள் செய்த தவறு தான். அவர்கள் அதை சரியாக செய்திருந்தாலும் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 9, 2025, 12:50 [IST]
English summary
Audi a4 crash video insurance denied due to missing road signs
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X